இந்தியா முழுவதுமே உணவுப் பொருள்கள், எரிபொருள்களின் விலை உயர்வு தான் பணவீக்கத்திற்கு வகை செய்துள்ளன என்றாலும் கூட, பிற மாநிலங்களுடன் ஒப்பிடும் போது தமிழ்நாட்டில் அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களின் விலைகள் சமாளிக்க முடியாத அளவுக்கு உயர்ந்துள்ளன. தமிழகத்தில் கடந்த ஜூலை மாதம் முதலே அதிகரித்துவரும் அரிசி விலை அக்டோபர் மாதத்தில் உச்சத்தை அடைந்தது தான் பணவீக்கம் இந்த அளவுக்கு உயர்ந்ததற்கு காரணம் ஆகும்.
மக்களை பாதிக்கும் அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களின் விலை உயர்வைக் கட்டுப்படுத்தும்படி கடந்த 4 மாதங்களாகவே வலியுறுத்தி வருகிறேன்.

ஆனால், அரசுத் தரப்பில் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. நியாயவிலைக் கடைகள் மூலம் குறைந்த விலையில் வெங்காயம் வழங்கும் திட்டம் தோல்வியடைந்து விட்டது. அதேபோல், ரூ.30 விலையில் சன்ன ரக அரிசி வழங்குவதாகக் கூறி விட்டு, நியாயவிலைக் கடை அரிசியையே மெருகூட்டி வழங்கியதால் மக்களிடம் வரவேற்பு கிடைக்கவில்லை. தமிழகத்தில் பணவீக்கம் உச்சத்தை அடைய இதுவே காரணம்.
தமிழ்நாட்டில் ஒருபுறம் தனி நபர் வருமானம் கடந்த சில மாதங்களாக குறைந்து வரும் நிலையில், இன்னொருபுறம் அத்தியாவசியப் பொருள்களின் விலைகள் உயர்ந்தால், அதை மக்களால் தாங்கிக் கொள்ள முடியாது. இதைக் கருத்தில் கொண்டு, அரிசி, பருப்பு, எண்ணெய் வகைகள் உள்ளிட்ட அனைத்து வகையான உணவுப் பொருள்களையும் மானிய விலையில் வழங்குவது உள்ளிட்ட நடவடிக்கைகளின் மூலம் அவற்றின் விலைகளை தமிழக அரசு கட்டுப்படுத்த வேண்டும்” என்பதை தெரிவித்துள்ளார்.