அப்படியே பண்ணாலும் போலீஸ் பாத்துப்பாங்கன்னு பயமில்லாம இருக்கோம். இப்ப அவங்க பாட்டுக்கு வராங்க வாங்குறாங்க குடிச்சிட்டு போறாங்க. அப்படியே எதாவது பிரச்சனை பண்ணாலும் போலீஸ் அவங்கள பாத்து பேசி சரி பண்ணிடுறாங்க. இப்பதான் இந்த இடத்துலையும் எந்த பிரச்சனையும் இல்ல.
இத்தன வருசத்துல எப்பையுமே இந்த இடம் இப்படி இருந்து பாத்தது இல்ல. இன்னைக்கி போலீஸ் வந்து நிக்கிறது, பேனர் வச்சது எல்லாமே எங்களுக்கு ரொம்பவே புதுசாவும் ஆச்சிரியமாவும் இருந்துச்சி. இன்னைக்கிதான் முதன் முறையா அந்த பஸ் ஸ்டாப்ல ஆளு யாரும் குடிக்காம இருக்கறதையே பாத்தோம்.
பயமில்லாம பஸ்ஸும் ஏறுனோம். எங்களுக்காக செய்தி வெளியிட்ட விகடனுக்கும், நடவடிக்கை எடுத்த அரசுக்கும் ரொம்ப நன்றி.
ஆனா,எங்களுக்கு இது எங்களுக்கான கண்துடைப்புக்கான தீர்வாதான் இருக்கு. இந்த ஒயின் ஷாப்ப வேற எடத்துக்கு சீக்கிரம் மாத்தி, அந்த பஸ்ஸ்டாப்பையும் சரிப் பண்ணி முக்கியமா கேமரா வசதியோட அங்கையே வையிட் பண்ணி பஸ் ஏறுற மாதிரி செஞ்சிக்கொடுக்கனும் . இதுதான் எங்களுக்கான நிரந்தர தீர்வாஇருக்கும்.