போக்குவரத்து விதிமீறல்களையும், அதனால் ஏற்படும் விபத்துகளையும் தடுப்பது காவல்துறைக்கு பெரும் சவாலாக மாறியுள்ளது.
இந்த சவாலுக்கு அதிநவீன செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் மூலம் மிகக் குறைந்த செலவில் தீர்வு கண்டு அசத்தியுள்ளனர், சென்னை ராஜலட்சுமி பொறியியல் கல்லூரி மாணவர்கள்.
போக்குவரத்து விதிமீறல்களைக் கண்டறிந்து, பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக, ராஜலட்சுமி பொறியியல் கல்லூரி மாணவர்கள் “காவல் AI’ என்ற தொழில்நுட்பக் கருவியை உருவாக்கியுள்ளனர்.

சஜிவ் ஜெஸ், ஹரிஸ், சந்தோஷ் குமார், சக்திவேல் ஆகிய மாணவர்களும், பேராசிரியர் விஜய், தொழில்நுட்ப வழிகாட்டி பினு ஆகியோரும் இணைந்து மொத்தம் 6 பேர் கொண்ட குழு இந்தத் தொழில்நுட்பக் கருவியை உருவாக்கியுள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் சோதனை அடிப்படையில் பொருத்தப்பட்டு, வரவேற்பைப் பெற்றுள்ள இந்த ‘காவல் AI’ (Kaaval AI) தொழில்நுட்பத்தின் பின்னணி குறித்தும், அது உருவான விதம் குறித்தும் இத்திட்டத்தில் முக்கியப் பங்காற்றிய மாணவர் சஜீவ் ஜெஸ்ஸைவை நாம் தொடர்புகொண்டு பேசினோம்.