ஓம் காளி! ஜெய் காளி! தவெக ஒரு ஓடுகாலி! விஜய் ஸ்டைலில் உதயநிதி கடும் விமர்சனம் | Udhayanidhi Stalin criticises Vijay in Maduranthagam

Spread the love

Tamilnadu

oi-Vishnupriya R

செங்கல்பட்டு: மதுராந்தகத்தில் திமுக வேட்பாளர் பரந்தாமனை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி, ஓம் காளி ஜெய் காளி, தவெக ஒரு ஓடுகாலி என கடுமையாக விமர்சனம் செய்தார்.

மதுராந்தகம் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் பரந்தாமனை ஆதரித்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி பேசியதாவது: கடந்த ஆண்டு இதே நாளில் கரூரில் பிரச்சாரம் செய்ய போகிறேன் என 10 மணி நேரம் தாமதமாக சென்றவர் விஜய்.

by election 2026 joseph vijay udhayanidhi stalin

இதனால் காலையிலேயே அங்கு கூடிய மக்களுக்கு தண்ணீர் வசதி கூட ஏற்படுத்தாமல் இடநெருக்கடி ஏற்பட்டு குழந்தைகள் உள்பட 41 உயிர்கள் பறிபோனது. இந்த சம்பவத்திற்காக இன்றைய முதல்வர், அன்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு கூட ஆறுதல் சொல்லாமல் ஓடி போனார். வண்டி மீது ஏறி பாட்டு பாடிவிட்டு அவர் கண் முன்னாலேயே 20 பேர் இறந்த போது கூட அங்கிருந்து திருச்சி விமான நிலையத்திற்கு ஓடிவிட்டார்.

பத்திரிகையாளர்கள் எல்லாம் கேள்வி எழுப்பியும் அவர் பதில் சொல்லவில்லை. இதற்காக எந்த ஒரு குற்றஉணர்ச்சியோ மனசாட்சியோ இல்லாதவர்தான். இப்போது நடைபெறும் தேர்தல் இயற்கையாக வந்ததல்ல. சோபா அனுப்பி கட்சிகளை அழைத்தார்.

அதிமுகவை இரண்டாக பிரித்து அதில் ஒரு பிரிவினருக்கு மட்டும் சோபா அனுப்பினார். திமுக வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதாக பொய் பரப்பினார். ஆனால் விஜய் புதிய டெக்னாலஜியாக எம்எல்ஏக்களையே விலைக்கு வாங்கிவிட்டார்.

10 நாட்களில் அதிமுக எம்எல்ஏக்கள் தவெக பக்கம் சென்றுவிட்டனர். அவர்கள்தான் மீண்டும் உங்களிடம் வந்து வாக்கு கேட்டு வருகிறார்கள். ஆனால் தொகுதி மக்கள் வேட்பாளர்களை விரட்டியடிக்க தொடங்கி விட்டார்கள்.

கடந்த 2 ஆண்டுகளாக திமுக தீயசக்தி என கூறி வந்தார். அப்போதெல்லாம் நாம் ஆளுங்கட்சியாக இருந்தோம். அவர் எதிர்க்கட்சியாக இருந்தார். இப்போது நமக்கும் ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது.

ஓம் காளி ஜெய் காளி தவெக ஒரு ஓடுகாளி என சொல்லுங்கள். இனி வரும் ஒவ்வொரு திமுக கூட்டத்திலும் இதனை சொல்ல வேண்டும். இவ்வாறு உதயநிதி கடுமையாக விமர்சித்துள்ளார்.

அண்மையில் மதுராந்தகத்தில் முதல்வர் விஜய் பிரச்சாரம் செய்தார். அப்போது விஜய் பேசுகையில், முதல்வரானதும் பாலத்தின் மீது ஏறி ஆய்வுக்கு சென்றால், ஸ்டாலின் சார், “நான் கட்டின பாலத்தில் ஏறி ஷூட்டிங் எடுக்கிறார் விஜய்”னு சொல்றாரு.

இந்த பாலம் என்ன அவரது சொந்த காசில் கட்டுன பாலமா, அவர்கிட்டதான் ரூ 10 ஆயிரம் மட்டும்தானே பணம் இருக்கிறார், சொந்தமாக கார், பைக் கூட இல்லையே, எந்த நிதியை வைத்து பாலத்தை கட்டியிருந்திருப்பார்?

இனி ஸ்டாலின் சாரை மட்டும்தான் விமர்சிப்பேன். அவர்தான் எனது ஸ்வீட் அங்கிள். ஜெம் வீரமணி வழக்கில் தவெக ஆட்சிக்கு வந்து அவரை பிடித்து உள்ளே போட்டோம். இதுவரை ஜெம் வீரமணி விவகாரத்தில் திமுகவும் அதிமுகவும் வாய்த் திறக்கவே இல்லை. குழந்தைகள் விவகாரத்தில் கூடவா இவர்களுக்கு கூட்டு!

“டெல்லியில் இருக்கும் திமுகதான் பாஜக, தமிழ்நாட்டில் இருக்கும் பாஜகதான் திமுக” என கடுமையாக விஜய் விமர்சித்திருந்தார். மேலும் எப்போதும் போல் ஓம் சக்தி பராசக்தி, திமுக ஒரு தீயசக்தி என விஜய் விமர்சித்திருந்தார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *