மதுரை விமான நிலையத்திலிருந்து காலை 11 மணிக்கு வருகை தந்து பின்னர் மதுரை விமான நிலையத்திலிருந்து பெருங்குடி விரகனூர் ரிங் ரோடு சாலை , சிந்தாமணி சாலை மற்றும் வைகை தென்கரையோர சாலை, அண்ணா நகர், ஆவின் சந்திப்பு, பனகல் சாலை வழியாக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை வளாகத்தில் உள்ள கலந்தாய்வு கூட்டரங்கு மேடைக்கு வருகை தருகிறார்.
பின்னர் 12.30 மணியளவில் விழா மேடையில் 30 குழந்தைகளின் தாய்மார்களுக்கு முதலமைச்சர் விஜய் தங்க மோதிரங்களை வழங்கி திட்டத்தை தொடங்கிவைக்கிறார். இதில் இரட்டை குழந்தைகளின் தாயார் ஒருவருக்கும் தங்க மோதிரங்கள் வழங்குகிறார்

இதனை தொடர்ந்து காந்தி அருங்காட்சியகத்திற்கு புனரமைக்கப்பட்ட காந்தி அருங்காட்சியகத்தை மக்களின் பயன்பாட்டிற்காக மதியம் 1 மணியளவில் திறந்துவைக்கிறார்.
இதனைத்தொடர்ந்து அழகர்கோவில் சாலையில் உள்ள அரசினர் சுற்றுலா மாளிகையில் மதிய உணவுக்கு பின்னர் ஓய்வெடுத்து மாலை 4 மணிக்கு மேல் மதுரை மீனாட்சியம்மன் கோவி
லுக்கு செல்கிறார். முதலமைச்சர் மீனாட்சி அம்மன் கோவில் சாமி தரிசனம் செய்ய வருகை தரவுள்ள நிலையில் கோவிலை சுற்றிலும் கிழக்கு சித்திரை வீதிகள், தெற்கு ஆவணி மூல வீதிகளில் இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. முதலமைச்சர் கோவிலுக்கு வருகை தந்தால் அதற்கான நடைமுறைகளுக்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.