
”டியர் ராகவேந்திரன்…
உங்கள் ஓய்வுக் காலத்துக்குத் தேவையான பணத்தை எப்படிச் சேர்ப்பது என்பது குறித்து நீங்கள் யோசிக்கத் தொடங்கி இருப்பதற்குப் பாராட்டுகள். உங்களுக்கு வந்திருக்கும் இந்தச் சிந்தனை எல்லோருக்கும் அவசியம் வரவேண்டும். அப்போதுதான் ஓய்வுக் காலத்தில் பணக் கஷ்டம் இல்லாமல் இருக்கும்.
உங்கள் ஓய்வுக் காலத்துக்குத் தேவையான 3 கோடி ரூபாயைச் சேர்ப்பது கடினமா, எளிதான காரியமா என்று கேட்டால், ஆம்/இல்லை என்பதே பதில். கடினம்தான் என்று சொன்னால், அதற்கான காரணங்கள் என்ன என்று பார்த்தால், நீங்கள் திட்டமிட்டு முதலீடு செய்ய வேண்டும். உங்கள் முதலீடு டைவர்சிஃபைட்-ஆக இருக்க வேண்டும். நீண்ட காலத்தில் அந்த முதலீடு ஆண்டுதோறும் 12% கூட்டு வளர்ச்சி (CAGR) அடைய வேண்டும். இடைப்பட்ட காலத்தில் ஏற்படும் ஏற்ற இறக்கங்களைப் பார்த்து, நீங்கள் டென்ஷன் ஆகாமல், தொடர்ச்சியாக நீங்கள் முதலீடு செய்ய வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக, உங்களுக்கு சரியான வழியைக் காட்டக்கூடிய ஒரு நிபுணரின் வழிகாட்டலுடன் அந்த முதலீட்டை நீங்கள் செய்ய வேண்டும். இந்த விஷயங்கள் எல்லாம் இல்லாவிட்டால், உங்கள் ஓய்வுக் காலத்துக்குத் தேவையான 3 கோடி ரூபாயைச் சேர்ப்பது கடினம்தான்.
இல்லை, 3 கோடி ரூபாயைச் சேர்ப்பது எளிதான காரியம் எனில், அதற்கான காரணங்கள் என்ன? முதலில் உங்களுக்கு சரியான வழியைக் காட்டக்கூடிய ஒருவர் இருக்க வேண்டும். மாதந்தோறும் எவ்வளவு ரூபாயை சேர்க்க வேண்டும், எத்தனை ஆண்டுகளுக்குச் சேர்க்க வேண்டும், இதற்கு நம் முதலீடு எப்படி டைவர்சிஃபைட்-ஆக இருக்க வேண்டும் என்பதெல்லாம் தெரிய வேண்டும். முக்கியமாக, நீங்கள் செய்யும் முதலீடு ஆண்டுதோறும் 12% கூட்டு வளர்ச்சியில் லாபம் தருகிறதா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். நீண்ட காலத்தில் பங்குச் சந்தை சார்ந்த மியூச்சுவ்ல் ஃபண்ட் திட்டத்தின் மூலம் நல்ல லாபம் பார்க்க முடியும் என்கிற நம்பிக்கையில் நீங்கள் பொறுமையாக இருக்க வேண்டும். இந்த விஷயங்களை எல்லாம் மனதில் கொண்டு நீங்கள் உங்கள் ஓய்வுக் காலத்துக்குத் தேவையான 3 கோடி ரூபாயை எளிதாக சேர்க்க முடியும் என்பதில் சந்தேகமே இல்லை.