“தேன் குடிக்க’, ‘ஆசை’ உள்ளிட்ட சுயாதீனப் பாடல்களை பின்னணிப் பாடகி பிரகதி குருபிரசாத்தும், பாடகர் டிஜேவும் இணைந்து பாடியிருக்கிறார்கள். டிஜே-யுடன் இணைந்து பாடிய பாடல்களுக்கு அவர் தனக்கு ராயல்டி தருவதாக உறுதியளித்திருந்தார். ஆனால், அப்பாடல்களுக்கான தொகையை அவர் வழங்கவில்லை என்று பாடகி பிரகதி அவருடைய சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவு ஒன்றைப் போட்டிருக்கிறார். அதற்கு பாடகர் டிஜேவும் பதில் பதிவு போட்டிருக்கிறார்.
அந்தப் பதிவில் பிரகதி, “கடந்த 10 வருடங்களாக நான் அமைதியாகவே இருந்தேன். என் சொந்தக் கதையை வெளிப்படையாகப் பேசி யாரையும் பழிக்க வேண்டும் என்றோ, யாருக்கும் கெடுதல் நினைக்க வேண்டும் என்றோ எண்ணும் நபர் நான் அல்ல.
ஆனால், இன்று நான் இந்த நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறேன் என்றால், அதற்கு எனது அமைதியை அனைவரும் அலட்சியமாகக் கருதியதுதான் காரணம். கடந்த 2013-ல் வெளியான ‘ஆசை’ பாடல் மாபெரும் வெற்றியடைந்தது.
அதைத் தொடர்ந்து, தனது அடுத்த ஆல்பத்திற்கு இன்னொரு பாடல் இணைந்து செய்யலாம் என்றும், அதற்கான பட்ஜெட் இல்லாததால் ராயல்டி பங்கீடு தருவதாகவும் டிஜே என்னிடம் கேட்டார். ஒரு நண்பனாக நானும் அதற்குச் சம்மதித்தேன்.
அப்படி உருவான ‘தேன் குடிக்க’ பாடல், உலகளவில் மிகப்பெரிய சுயாதீனத் தமிழ் ஹிட் பாடலாக மாறியது. யூடியூபில் 85 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளும், ஸ்பாட்டிஃபை தளத்தில் 49 மில்லியன் ஸ்ட்ரீம்களும் கடந்து சாதனை படைத்து வருகிறது.