வங்கியில் ரூ.10 லட்சத்துக்கு மேல் டெபாசிட் செய்யலாமா? வருமான வரி விதிகள்!|Depositing More Than ₹10 Lakh? Don’t Panic—Know the Rules

Spread the love

வங்கியில் 10 லட்சத்திற்கு மேல் பணம் போடக்கூடாது என்கிற பொது பேச்சு உண்டு.

“வங்கி சேமிப்புக் கணக்கில் எவ்வளவு பணம் வேண்டுமானாலும் டெபாசிட் செய்யலாம்; அதற்கு எந்தக் கட்டுப்பாடும் கிடையாது.

ஆனால், ஒரு நிதியாண்டில் சேமிப்புக் கணக்கில் 10 லட்சம் ரூபாய்க்கு மேல் ரொக்கமாக டெபாசிட் செய்யப்படும்போது, அந்தத் தகவலை வங்கி தானாகவே வருமான வரித்துறைக்கு அனுப்பிவிடும்.

ஆடிட்டர் கிரி பாபு

ஆடிட்டர் கிரி பாபு

வங்கிகள் மற்றும் வருமான வரித்துறையைப் பொறுத்தவரை, வாடிக்கையாளர்களின் பான் எண்ணின் அடிப்படையிலேயே அனைத்துப் பரிவர்த்தனைகளும் கண்காணிக்கப்படுகின்றன.

இ-ஃபைலிங்கின் போது…

வருமான வரித்துறையின் இ-ஃபைலிங் போர்ட்டலில் உள்ள AIS மற்றும் 26AS ஆகிய ஆவணங்களில், ஒருவர் அந்த ஆண்டில் மேற்கொண்ட அனைத்துப் பரிவர்த்தனைகளும் பதிவாகியிருக்கும்.

குறிப்பாக, 2026-27 நிதியாண்டைப் பொறுத்தவரை, வெளிநாட்டுப் பயணங்கள், வெளிநாடுகளில் செய்த முதலீடுகள் மற்றும் செலவுகள் வரை அனைத்தும் இதில் துல்லியமாகப் பதிவாகியிருக்கும்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *