கடன் தீர முனைவர் கே.பி.வித்யாதரன் சொல்லும் 4 பரிகாரங்கள்|4 remedies suggested by Dr. K.P. Vidyadharan to clear debts!

Spread the love

ஒருவரின் வாழ்வையே புரட்டிப்போட்டுவிடுவது கடன் பிரச்னை. `சின்ன தொகைதானே’ என்று வாங்கிய கடன், மலை அளவு உயர்ந்து கழுத்தை நெரிக்க… மனிதர்கள் படும் பாட்டைச் சொல்லி மாளாது!

கடன் பரிகாரங்கள்

கடன் பரிகாரங்கள்

பொதுவாக ஒருவரின் ஜாதகத்தில் லக்னத்துக்கு 6-ம் இடம் கடன், ரோகம், ருணம், சத்ரு ஸ்தானம் என்கிறது ஜோதிட சாஸ்திரம். ஆறாம் இடத்தில் பாவ கிரகங்கள் இருந்தால் ஓரளவு நல்லது. சுபகிரகங்கள் அமராமல் இருக்க வேண்டும்.

அப்படி சுபகிரகங்கள் 6-ம் இடத்தில் மறைந்தால் நிச்சயம் கடன் பிரச்னைகளில் சிக்க வேண்டியிருக்கும். 6-ம் இடத்தில் குரு, சுக்கிரன் போன்றோர் இருந்தாலும் தொடர்ந்து கடன் இருக்கும். புதன் இருந்தால், வியாபாரத்துக்காக கடன் வாங்கவேண்டிவரும். சரி, இனி கடன் பரிகாரங்களைத் தெரிந்துகொள்வோம்.

கடன் நிவாரண பரிகாரங்கள்

கடன் நிவாரண பரிகாரங்கள்

1. கோதுமை உருண்டை பரிகாரம்

கோதுமை மாவு கொஞ்சம் எடுத்துக்கொள்ளுங்கள். அதில் நீர் சேர்த்துப் பிசைந்து 7 அல்லது 14 உருண்டைகளாக செய்துகொள்வது நல்லது. பின்னர், வன்னி மரக்குச்சி அல்லது மாதுளை மரக் குச்சி ஒன்றை எடுத்துக்கொள்ளுங்கள்.

பொதுவாகவே வன்னி மரம் சக்தி வாய்ந்தது. வன்னி மரத்தை வலம் வந்தால் கிரக தோஷங்கள் தீரும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். சனி பகவானின் பார்வையால் தவிப்பவர்களுக்கு வன்னி மரப் பிரதட்சிணம் பரிகாரமாகச் சொல்லப்படும். அதிலும் வன்னி மரத்தின் அடியில் விநாயகர் இருந்தால் கூடுதல் மகிமை. வன்னி மரத்தை தரிசித்தாலும் வலம் வந்தாலும் நற்பலன்கள் கூடும். மாதுளை மரமும் அப்படிப்பட்ட சக்தி வாய்ந்த மரம்தான். மாதுளை முத்துகளால் முருகப்பெருமானுக்கு அபிஷேகம் செய்தால் கடன் சுமை குறையும் என்பார்கள்.

ஆக, இந்த இரு குச்சிகளில் ஏதேனும் ஒன்றைஎடுத்துக் கொள்ளுங்கள். குங்குமத்தில் கொஞ்சம் நீர் விட்டுக் கரைத்துக் கொள்ளுங்கள். பிறகு முன் சொன்ன இரண்டு குச்சிகளில் ஏதேனும் ஒரு குச்சியால், குங்குமக் கரைசலைத் தொட்டு கோதுமை உருண்டைகளின் மீது ‘ஸ்ரீம்’ என்று எழுதுங்கள்.

பிறகு அந்த உருண்டைகளை எடுத்துட்டுப் போய் அருகில் இருக்கும் குளம் அல்லது ஆற்றில் வாழும் மீன்களுக்கு உணவாகப் போடுங்கள். இப்படி அடிக்கடி செய்துவந்தால் உங்கள் கடன் பிரச்னை படிப்படியாகக் குறைய ஆரம்பிக்கும். வருமானமும் பெருகும். ஏதோ ஒரு வழியில் குடும்பத்துல் இருக்கும் தடங்கல்கள் விலக ஆரம்பிக்கும். தனப்பிராப்தம் அதிகரிக்கும். நல்லவைகள் வரிசைகட்டும்.

கோதுமை மாவு சூரியனுக்கு உகந்தது. கோதுமை மாவை உருண்டையாக உருட்டி அதில் குங்குமத்தால ஸ்ரீம்-என்று எழுதி அதைத் தண்ணியில விடும்போது சூரியனின் அருள்சேர்ந்து பணப் பிரச்னை தீரும் என்கிறார்கள்.

குலதெய்வம்

குலதெய்வம்

2. குலதெய்வ வழிபாடு

முந்தைய வினைகளின் காரணமாக, உண்டான கடன் தொல்லைகளிலிருந்து மீள, குலதெய்வ வழிபாடு உங்களுக்குத் துணை செய்யும். மூன்று பெளர்ணமிகள் தொடர்ந்து குலதெய்வ வழிபாடு செய்துவந்தால் கடன் தொல்லைப் படிப்படியாகக் குறையும். ஆண்டுக்கு ஒருமுறை கட்டாயம் குலதெய்வ கோயிலுக்கு சென்றும் வரவேண்டும்.

குலதெய்வ கோயில் தூரமாக இருப்பவர்கள் அல்லது குலதெய்வமே தெரியாதவர்கள் ஐந்துமுக விளக்கு வைத்து நெயிட்டு தீபமேற்றி, முடிந்த அளவு படையலிட்டு, வழிபட வேண்டும். இப்படி, ஒன்பது பெளர்ணமிகள் வழிபட்டு வந்தால், கட்டாயம் கடன்கள் அடைபடும். அதுமட்டுமின்றி வரவேண்டிய கடன் பாக்கியிருந்தாலும், வசூலாகிவிடும்.

3. கோமாதா வழிபாடு!

செல்வத்தின் அம்சமான கோமாதாவின் வழிபாடு உங்களை நிச்சயம் காக்கும். காலையில் விழித்ததும் பசு மாட்டை காண்பது தீர்வு கொடுக்கும். மேலும் ஒருமுறையாவது பசுவுக்கு கீரையும் பழமும் கொடுப்பது நல்லது. திருமகள் உறையும் பசுவின் பின்புறத்தைத் தொட்டு வணங்குவதும் செல்வம் சேர வழி தரும்.

4. குளிகை நேரத்தில்…

குளிகை நேரத்தில் வாங்கிய கடனில் ஒரு பங்கை அடையுங்கள். நிச்சயம் முழு கடனும் தீரும். அதுபோல குளிகை நேரத்தில் கடனே வாங்காதீர்கள். அடகு வைத்த நகைகள் வீடு வந்ததும் நன்கு சுத்தம் செய்து மஞ்சள் நீரில் போட்டு பூஜை அறையில் ஒருநாள் வைத்த பிறகே உபயோகியுங்கள்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *