உங்களைப் பற்றி அவதூறு பரப்பிட்டாங்களா?
முதலில் பதற்றப்படாமல், அந்தப் பதிவு அல்லது செய்திக்கான ஆதாரங்களைப் பாதுகாத்துக்கொள்ளுங்கள்.
ஸ்கிரீன்ஷாட் (Screenshot), மெசேஜ், தேதி, நேரம், வாட்ஸ்அப் குரூப் விவரங்கள், ஸ்டேட்டஸ் அல்லது சமூக ஊடகப் பதிவுகள் போன்றவற்றை முடிந்தவரை பாதுகாத்து வையுங்கள்.
பின்னர், சம்பந்தப்பட்ட தகவலின் தன்மை மற்றும் சூழ்நிலையைப் பொறுத்து சட்ட ஆலோசனையைப் பெற்று உரிய நடவடிக்கையைத் தேர்வு செய்யலாம்.
குற்றவியல் அவதூறு தொடர்பான புகார் நடைமுறையில், பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா, 2023 (BNSS) – பிரிவு 222 முக்கியமானது. BNSS பிரிவு 222-ன் படி, பொதுவாக அவதூறு குற்றத்தை நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள, அந்தக் குற்றத்தால் பாதிக்கப்பட்ட நபர் (person aggrieved) புகார் அளித்திருக்க வேண்டும். சில குறிப்பிட்ட சூழ்நிலைகளுக்கு சட்டத்தில் தனியான நடைமுறைகளும் உள்ளன.
ஒரு ‘Forward’… ஆனால் சட்டப் பிரச்னை பெரியதாக இருக்கலாம்!*
ஒரு ‘Forward’ செய்ய சில விநாடிகள்தான் ஆகும்.
ஆனால், அது ஒருவருடைய நற்பெயரைப் பாதிக்கும் வகையில் இருந்தால், அதன் சட்ட விளைவுகளை அவ்வளவு எளிதாகக் கடந்து செல்ல முடியாது.
அடுத்த முறை ஒரு தகவலை Forward செய்வதற்கு முன்…
“இது உண்மையா? இதை நான் ஏன் பகிர்கிறேன்? இதனால் மற்றொருவருக்கு பாதிப்பு ஏற்படுமா?” இதைப் பகிர்வதற்கு நியாயமான காரணம் இருக்கிறதா?
என்று ஒருமுறை யோசியுங்கள்.
ஒரு Click செய்யும் முன்… ஒரு முறை யோசிப்பது நல்லது!