அவர் புனே போலீஸில் கொடுத்துள்ள புகாரின் அடிப்படையில் போலீஸார் இது குறித்து விசாரித்து வருகின்றனர். இது குறித்து போலீஸ் அதிகாரி பாலாஜி கூறுகையில், “‘விப்ரோவின் பெண் திட்ட மேலாளர் ஒருவர் காப்பீடு தொடர்பான பணியில் ஈடுபட்டிருந்தபோது அவரது பெண் சக ஊழியர் தன்னைப் பற்றி சில ஆட்சேபகரமான கருத்துக்களைக் கூறியதாக எங்களிடம் புகார் அளித்துள்ளார். அதோடு அந்த பெண் ஊழியர் தன்னை ராஜினாமா செய்யும்படி தொடர்ந்து நிர்ப்பந்தம் செய்து வந்ததாகவும் அவர் தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து விசாரித்து வருகிறோம். அப்பெண்ணின் புகார் மீது கம்பெனி நிர்வாகம் என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்பது குறித்தும் ஆய்வு செய்து வருகிறோம்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் குற்றச்சாட்டை விப்ரோ நிறுவனம் மறுத்துள்ளது. இது குறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”விப்ரோவில், ஊழியர்களின் நலன், கண்ணியம் மற்றும் மரியாதை ஆகியவை முதன்மையானவை. எந்தவொரு வகையிலான முறைகேடு, பாகுபாடு, துன்புறுத்தல் அல்லது ஒரு தனிநபரின் அடிப்படை உரிமைகள் மற்றும் சுதந்திரங்களைப் பாதிக்கும் செயல்கள் ஆகியவற்றின் மீது நாங்கள் எந்த வித சகிப்புத்தன்மையும் காட்டுவதில்லை. போலீஸ் அதிகாரிகளின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்து வருகிறோம். அவர்கள் கேட்ட அனைத்து ஆவணங்களும் கொடுக்கப்பட்டுள்ளது,” என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.