கடந்த 2022-ஆம் ஆண்டு, விஷ்ணு விஷால் – ஐஸ்வர்யா லக்ஷ்மி நடிப்பில் வெளியான “கட்டா குஸ்தி’ திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருந்தது.
இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அதன் இரண்டாம் பாகம் ஜூலை 3-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
இந்நிலையில் மக்களிடம் வரவேற்பைப் பெற்ற ‘கட்டா குஸ்தி-2’ படத்தைப் பார்த்து நடிகர் ரஜினிகாந்த் விஷ்ணு விஷாலை போனில் தொடர்புகொண்டு பாராட்டி இருக்கிறார்.

இதனை விஷ்ணு விஷால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருகிறார். அவரது பதிவில், ” செம்ம படம். ரொம்ப ஜாலியான எண்டர்டெய்னர்.. இந்த மாதிரி படம் இப்போ எல்லாம் வர்றதே இல்ல..
ரொம்ப நல்லா பெர்ஃபார்ம் பண்ணிருக்கீங்க. ஐஸ்வர்யா லெக்ஷ்மியும், நல்ல பெர்ஃபார்மன்ஸ். குட்டி சாரா பாப்பா, எப்படி புடிச்சீங்க. ரொம்ப அற்புதமா நடிச்சிருக்காங்க.