அப்பாவை ஒரு நாள் கொலை செய்வேன்
இதனால் ராம் சிங் மீது அவரது மகனுக்கு வெறுப்பு ஏற்பட்டுள்ளது. அதோடு ஒரு நாள் அப்பாவை கொலை செய்வேன் என்று அடிக்கடி தனது தாயாரிடம் மைனர் மகன் தெரிவித்துள்ளார். மைனர் தனது தந்தையை கொலை செய்ய முன்கூட்டியே திட்டமிட்டு கத்தியை ஆன்லைனில் வாங்கி இருக்கிறார். சம்பவத்தன்று இரவு சுனிதாவிற்கும், அவரது கணவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த வாக்குவாதம் முற்றிய நிலையில் அவரது மகன் தனது தந்தையிடம் உன்னை கொலை செய்துவிடுவேன் என்று மிரட்டி இருக்கிறார்.
இரவில் ராம் சிங் உறங்கிய பிறகு மைனர் மகன் அவரது கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார். இதில் சத்தம் கேட்டு எழுந்த அவரது இரண்டாவது மனைவியையும் கொலை செய்துள்ளார். இந்த களேபரத்தில் ராம் சிங் தாயார் மற்றும் உறவினர் மகிமா ஆகியோர் எழுந்தனர். அவர்கள் வெளியில் கொலையை சொல்லிவிடக் கூடாது என்பதற்காக அவர்களையும் கொலை செய்தார். இக்கொலைக்கு தனது மகனுக்கு சுனிதாவும் அவரது மகளும் உதவி செய்துள்ளனர். கொலைக்குப் பிறகு, குற்றம் சாட்டப்பட்டவர்கள் அருகில் நிறுத்தப்பட்டிருந்த டிராக்டரில் இருந்து டீசலை எடுத்து, உடல்கள் மீது ஊற்றினர்.
பின்னர் உடல்களை இழுத்து, ஸ்கார்பியோ காரில் ஏற்றினர். வீட்டில் இருந்து சுமார் 500 மீட்டர் தூரத்திற்கு வாகனத்தை ஓட்டிச் சென்று தீ வைத்து எரித்துள்ளனர். தடயவியல் ஆய்வில் எரிக்கப்பட்ட மூன்று உடல்களும் பின் இருக்கையில் மடங்கிய நிலையில் கிடந்தது. இதன் மூலம் அவர்கள் காருக்குள் வருவதற்கு முன்பே கொலை செய்யப்பட்டு இருக்கவேண்டும் என்று தடயவியல் நிபுணர்கள் தெரிவித்தனர். சிறுவன் போலீஸாரிடம் அளித்த வாக்குமூலத்தில், தனது தந்தையை உணவில் விஷம் வைத்து பலமுறை கொல்ல முயன்றதாகவும், சுரங்கப் பகுதியில் உள்ள மலையிலிருந்து தள்ள முயன்றதாகவும், ஆனால் அது தோல்வியடைந்ததாகவும் கூறினார். இக்கொலைகளைச் செய்துவிட்டு உறவினர்களுடன் சேர்ந்து அமர்ந்து தனது கணவர் இறந்ததற்காக சுனிதா நெஞ்சில் அடித்து அழுதததாகவும் போலீஸார் தெரிவித்தனர்.