கணவர் படுக்கையில் விஷமில்லா பாம்பை ஏவி.. அடுத்த ரூமில் கூலாக தூங்கிய மனைவி.. இப்ப என்னாச்சு தெரியுமா? | How Did Meerut Wife Get a Death Sentence After Leaving a Non-Venomous Snake on Husband’s Bed?

Spread the love

India

oi-Hema Vandhana

கான்பூர்: கணவர் படுக்கையில் பிணமாக கிடக்கிறார்.. அவரது உடலுக்கு அடியில் உயிருடன் ஒரு பாம்பு இருக்கிறது.. பாம்பு கடித்துதான் கணவர் இறந்துவிட்டதாக மனைவி கதறி அழுகிறார்.. ஆனால், கடைசியில் இந்த மரணத்தின் பின்னணியில் இருந்த அதிர்ச்சி உண்மை அம்பலமானது. கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை கொலை செய்த மனைவிக்கு நீதிமன்றம் இப்போது தண்டனை வழங்கியுள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம் மீரட் மாவட்டம் அக்பர்பூர் சாதத் கிராமத்தை சேர்ந்தவர் அமித் காஷ்யப் என்கிற மிக்கி. இவரது மனைவி ரவிதா. கடந்த 2025-ம் ஆண்டு ஏப்ரல் 12-ம் தேதி, வீட்டில் படுக்கையில் அமித் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தார். அவரது உடலுக்கு அடியில் ஒரு பாம்பும் இருந்தது. இதனால், பாம்பு கடித்துதான் அமித் இறந்திருக்க வேண்டும் என்று முதலில் குடும்பத்தினர் நினைத்தனர்.

Snake Murder Case Meerut Crime News Wife Lover Murder

கணவன் மீது பாம்பு ஏவிய மனைவி

மனைவி ரவிதாவும் கணவர் இறந்ததைப் பார்த்து கதறி அழுதார். ஆனால், போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட், இந்த வழக்கையே தலைகீழாக மாற்றியது.

அமித்தின் கழுத்திலும் மூக்குப் பகுதியிலும் என 10 இடங்களில் கடித்த காயங்கள் இருந்தன. உடலிலும் கீறல்கள் காணப்பட்டன. அதைவிட முக்கியமாக, பாம்பு கடித்ததால் அமித் இறக்கவில்லை என்பது போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்டில் தெரியவந்தது. மூச்சுத்திணறல் காரணமாகவே அவர் உயிரிழந்ததாகவும் மருத்துவ அறிக்கை கூறியது.

கள்ளக்காதல் அம்பலம்

இதையடுத்து, அமித்தின் மரணம் தொடர்பாக போலீசார் அக்கம் பக்கத்தினரிடம் தீவிர விசாரணையில் இறங்கினர். அப்போதுதான் ரவிதாவுக்கும், அவரது பக்கத்து வீட்டில் வசித்த அமர்தீப்புக்கும் இடையே திருமணத்தை மீறிய உறவு இருந்தது தெரியவந்தது. இருவரும் சேர்ந்து அமித்தை கொலை செய்துவிட்டு, பாம்பு கடித்ததாக நாடகமாடியிருக்கலாம் என்று போலீசார் சந்தேகித்தனர்.

இதையடுத்து விசாரணையை கள்ளக்காதல் ஜோடியிடம் துவங்காமல், வேறு விதத்தில் விசாரணையை ஆரம்பித்தனர்.. அதாவது இந்த வழக்கில், அந்த பாம்பே முக்கிய தடயமாக மாறியது. அமித்தின் உடலுக்கு அடியில் கிடந்த பாம்பை பிடித்து பரிசோதித்தபோது, அதன் விஷப்பை அகற்றப்பட்டிருந்தது தெரியவந்தது. இதனால், பாம்பு கடித்ததால் அமித் இறந்திருக்க வாய்ப்பில்லை என்பது மேலும் உறுதியானது.

விஷப்பற்கள் இல்லாத பாம்பு

அதுமட்டுமல்ல, அந்த பாம்புக்கு விஷப்பற்கள் இல்லை என்பதால், அதனால் அமித்தின் உயிரைப் பறித்திருக்க முடியாது என்று பாம்பாட்டிகளும் விசாரணையில் தெரிவித்தனர்.

இப்போதும் கள்ளக்காதல் ஜோடியிடம் போலீசார் நெருங்காமல், அவர்களது செல்போன் அழைப்புப் பதிவுகளையும் ஆய்வு செய்தனர். அமித் இறந்த 4 நாட்களுக்குள் ரவிதாவும் அமர்தீப்பும் 70-க்கும் மேற்பட்ட முறை பேசியிருந்தனர். 2 பேரின் செல்போன் நம்பர்களிலிருந்தும 500-க்கும் மேற்பட்ட போன்கள் பேசப்பட்டிருந்தது அம்பலமானது.. எனவே, இந்த ஆதாரங்களும் வழக்கில் முக்கியமானதாக அமைந்தன… இதற்கு பிறகே கள்ளக்காதல் ஜோடியை போலீசார் கைது செய்தனர்..

1000 ரூபாய்க்கு பாம்பு

அவர்களிடம் விசாரணை மேற்கொண்டதில், ரவிதாவும் அமர்தீப்பும் ஒரு பாம்பாட்டியிடம் ரூ.1,000 கொடுத்து ஒரு பாம்பை வாங்கினார்களாம்.. ஏப்ரல் 17ம் தேதி இரவு, அமித் தூங்கச் சென்ற பிறகு, ரவிதா தனது காதலன் அமர்தீப்பை வீட்டுக்கு அழைத்துள்ளார். 2 பேரும் சேர்ந்து அமித்தின் கழுத்தை நெரித்து கொன்றுள்ளனர்.. பிறகு தூங்கிய படுக்கையில் அந்த பாம்பை விட்டுள்ளனர்.. இறுதியில், அமர்தீப்பை வழிஅனுப்பிவிட்டு, ரவிதா வேறொரு ரூமில் தூங்க போய்விட்டாராம்.

மறுநாள் காலையில் குடும்பத்தினர் எழுந்து பார்த்தபோது, அமித் இறந்து கிடந்தது தெரியவந்துள்ளது.. அவரது உடலில் பாம்பு கடித்தது போன்ற தழும்புகளும் இருந்துள்ளன. அதனால்தான் அவர் பாம்பு கடித்து இறந்துவிட்டதாக குடும்பத்தினர் நினைத்துள்ளனர்.

ஆளுக்கொரு கண்ணீர் வேண்டுகோள்

இறுதியில் இந்த வழக்கு நீதிமன்றம்வரை சென்றது.. குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டது.. இந்த வழக்கில் ரவிதாவும் அமர்தீப்பும் கொலை மற்றும் சதித் திட்டம் தீட்டிய குற்றங்களில் ஈடுபட்டதை நீதிமன்றம் கடந்த அக்டோபர் 7-ம் தேதி உறுதி செய்தது.

திட்டமிட்டு கொலை செய்ததுடன், அதை மறைக்க முயன்றதும் கடுமையான குற்றம் என்று அரசுத் தரப்பில் வாதிடப்பட்டது. அமித்தின் குடும்பத்தினரும் இருவருக்கும் அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் என்று கோரினார்கள்.

தண்டனை தந்த நீதிமன்றம்

இதையடுத்து, நேற்றைய தினம் கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிபதி ஜெய்வீர் சிங் நாகர் தண்டனை விவரங்களை அறிவித்தார்… ஆனால் தண்டனை அறிவிப்பதற்கு முன்பு, இருவரிடமும் அவர்களது தரப்பு கோரிக்கைகள் கேட்கப்பட்டன. தனக்கு 3 சிறிய குழந்தைகள் இருப்பதால் அவர்களை பார்த்துக்கொள்ள வேண்டும் என்று ரவிதா கோரினார்… வயதான தனது பெற்றோரைப் பராமரிக்க வேண்டும் என்று அமர்தீப்பும் கேட்டுக்கொண்டார்..

ஆனால் நீதிமன்றம், இவர்கள் 2 பேருக்குமே மரண தண்டனை விதித்துள்ளது. தம்பதியரின் 3 குழந்தைகளின் பராமரிப்பை உறுதி செய்யுமாறு மீரட் மாவட்ட ஆட்சியருக்கும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது… 1000 ரூபாய்க்கு பாம்பை வாங்கி, கணவரின் கதையை முடித்த மனைவிக்கு, ஆயுசுக்கும் ஜெயில் தண்டனை கிடைத்துள்ளது, பலரது கவனத்தையும் பெற்றுள்ளது..!!

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *