கத்திக்குத்துடன் 174 பயணிகளைக் காப்பாற்றிய இந்திய விமானி ஸ்மித் மிச்சார் யார்? | Incident Timeline

Spread the love

தற்போது உலகம் முழுவதும் பேசப்பட்டு வரும் உண்மையான வீரர்… ஹீரோ… – ஸ்மித் மச்சார்!

ஃபிளைதுபாயின் விமானம். பிளைட் நம்பர் FZ1073. துபாயில் இருந்து இஸ்ரேலில் உள்ள டெல் அவிவ்விற்குப் பறக்கும் விமானம் இது.

டைம்லைன்

நேற்று (செப்டம்பர் 30) துபாய் சர்வதேச விமான நிலையத்திலிருந்து காலை 3.05 மணிக்கு ஃபிளைதுபாய் விமானம் பறக்கத் தொடங்கி பின், 34,000 அடி உயரத்தை எட்டுகிறது.

காலை 5.21 மணியளவில், விமானம் திடீரெனக் கீழே சாய்ந்து இறங்கத் தொடங்கியுள்ளது… அடுத்த சில நொடிகளிலேயே மேலே ஏறி மீண்டும் வேகமாகக் கீழே இறங்கியுள்ளது. அப்போது விமானம் பறந்த உயரம் 15,000 அடிகள்.

ஃபிளைதுபாய் விமானம்
ஃபிளைதுபாய் விமானம்

சில நிமிடங்களில்… 5.28 மணியளவில், பொது அவசர நிலைக் கோடான ‘7700’ அந்த விமானத்திலிருந்து வருகிறது. அப்போது ஃபிளைதுபாய் விமானம் சவூதி அரேபியா, ஜோர்டான் எல்லைக்கு அருகே பறந்துகொண்டிருந்திருக்கிறது.

அடுத்த 7 நிமிடங்களில் (5.35 மணிக்கு) டிரான்ஸ்பாண்டர் சிக்னல் 7700-லிருந்து 7500 ஆக மாறுகிறது. அப்படியென்றால், அது விமானத்தைக் கடத்தும் முயற்சிக்கும் சிக்னல் அல்லது விமானத்தில் சட்டவிரோத ஊடுருவல் இருப்பதாகக் கூறும் சிக்னல் ஆகும்.

அப்போது ஜோர்டான் வான்வெளியில் பறந்துகொண்டிருந்த விமானம், சவூதி அரேபியாவை நோக்கித் திரும்பியிருக்கிறது.

சவூதி அரேபியாவிலுள்ள தபூக் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு மையத்தின் அனுமதி கிடைத்த பின், சவூதியில் உள்ள அப்துல்அஜீஸ் சர்வதேச விமான நிலையத்தில் ஃபிளைதுபாய் விமானம் பத்திரமாகத் தரையிறங்கியுள்ளது.

விமானத்தில் பயணித்த 174 பயணிகளும் தற்போது பத்திரமாக உள்ளனர்.

மேலே குறிப்பிட்டுள்ள நேரம் GMT நேர அடிப்படையிலானது மற்றும் அவை ‘ஃபிளைட்ரேடார்24’ தரவுகளைக் குறிக்கிறது.

ஸ்மித் மச்சார்
ஸ்மித் மச்சார்

ஸ்மித் மச்சார்…

FZ1073 துபாய் விமானத்தின் ஒரு விமானி ஸ்மித் மச்சார். இவர் இந்தியர். இன்னொரு விமானி ஓமன் நாட்டைச் சேர்ந்தவர் என்று இஸ்ரேலிலிருந்து வரும் தரவுகள் கூறுகின்றன.

ஓமன் நாட்டைச் சேர்ந்த விமானி விமானத்தைத் தகர்க்க முயற்சித்திருக்கிறார் என்று கூறப்படுகிறது. இதைத் தடுக்க ஸ்மித் மச்சார் முயற்சிக்க, இவரைக் கத்தியால் குத்தியுள்ளார் அந்த விமானி.

கடுமையான காயம் ஏற்பட்ட பின்னும், ஸ்மித் மச்சார் காக்பிட்டின் கதவைத் திறந்து, விமானப் பணியாளர் மற்றும் பயணிகள் உதவியுடன் விமானத்தைப் பத்திரமாகத் தரையிறக்கியுள்ளார்.

கத்திக்குத்து… ரத்தத்திற்கு மத்தியிலும் 174 பயணிகளின் உயிரைக் காத்த ஸ்மித் மச்சார் இந்தியாவின் பெருமிதமாக மாறியுள்ளார். இதை இந்தியப் பிரதமர் மோடியே குறிப்பிட்டிருக்கிறார்.

யார் இந்த ஸ்மித் மச்சார்?

ஸ்மித் மச்சாரின் லிங்க்ட் இன் புரொஃபைல்படி, 2022-ம் ஆண்டு ஜூன் மாதம் முதல் ஃபிளைதுபாய் விமான நிறுவனத்தில் கேப்டனாகப் பணிபுரிந்து வருகிறார்.

இதற்கு முன்பு, மும்பையில் ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனத்தில் 2011-ம் ஆண்டு முதல் கமாண்டராகப் பணிபுரிந்துள்ளார்.

ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனத்தில், விமானிகளுக்குப் பயிற்சியளிக்கும் ‘லைன் டிரெய்னிங் கேப்டனாகவும்’ 2020-ம் ஆண்டு நவம்பர் முதல் 2022-ம் ஆண்டு ஜூன் வரை இருந்திருக்கிறார்.

இந்தக் கணக்குகளின்படி பார்த்தால், ஸ்மித் மச்சாருக்கு 15 ஆண்டுகளுக்கு மேல் ஃபிளையிங் அனுபவம் உள்ளது.

ட்ரம்ப்
ட்ரம்ப்

படிப்பு…

பள்ளிப் படிப்பிற்குப் பின், குடும்பத் தொழிலைப் பார்த்துக்கொள்ள டெக்ஸ்டைல் இன்ஜீனியரிங் படிப்பைப் படித்திருக்கிறார் ஸ்மித் மச்சார். அதன்பின், இவருக்கு விமானத் துறையில் ஆர்வம் வர, நியூசிலாந்தில் விமானிக்கான கோர்ஸைப் படித்திருக்கிறார்.

ட்ரம்ப் தகவல்

இந்தச் சம்பவத்தையடுத்து இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவிடம் பேசியிருக்கிறார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்.

ட்ரம்ப் சொல்லும் தகவலின் படி, சிகிச்சைப் பெற்று வரும் ஸ்மித் மச்சார் இன்னும் மோசமான நிலையில் தான் இருக்கிறார்.

விரைவில் குணமடைய வேண்டும்… உயிரைப் பணயம் வைத்து, 174 பயணிகளின் உயிரைக் காப்பாற்றியவர் ஸ்மித் மச்சாருக்கு ராயல் சல்யூட்!

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *