இதனால் இந்தத் தொகுதியில் தி.மு.க வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ராஜ்மோகன் வெற்றி பெற்றிருக்கிறார்.
விஜய் – விசில் இரண்டை மட்டுமே நம்பியிருந்த அவர் எழும்பூர் தொகுதியில் வெற்றி வாகையை சூடியிருக்கிறார்.

அமைச்சர் சேகர் பாபுவுக்கும் சிட்டிங் எம்.எல்.ஏவான பரந்தாமனுக்கும் ஆகவே ஆகாது. சேகர் பாபுவின் தலையீட்டால் பரந்தாமனுக்கு சீட் கிடைக்காமல் போனது. இதனால் அவர் தொகுதியில் இறங்கி வேலையே செய்யவில்லை.
மேலும், திமுக சமூக மற்றும் மதவாரியாகக் கணக்குகளை போட்டுக் கொண்டிருந்தது. ஆனால், விஜய் நிறுத்திய ராஜ் மோகனை சாதி மத கணக்குகளுக்கு அப்பாற்பட்டு மக்கள் ஆதரித்திருக்கின்றனர்.
இளைஞர்களை கடந்து எல்லா தரப்பு மக்களின் ஆதரவையும் ராஜ் மோகன் பெற்றிருப்பதுதான் அவரின் வெற்றிக்கு காரணமாக அமைந்திருக்கிறது.