கத்தியால் பிளக்கப்பட்ட தலை.. எனக்கு 2 குழந்தை இருக்கு.. ரத்த வெள்ளத்தில் இந்திய பைலட் சொன்ன வார்த்தை.. டாக்டர் உருக்கம் | Head and hands almost severed in two, says Dentist who treated Indian pilot in Dubai – Tel Aviv Flight

Spread the love

International

oi-Nantha Kumar R

டெல்அவிவ்: துபாய் – டெல்அவிவ் விமானத்தில் இந்திய பைலட் ஸ்மித் மச்சாரை கத்திய சம்பவத்தில் அவரது தலை மற்றும் கைகள் இரண்டாக பிளக்கப்படும் அளவுக்கு கொடூரமாக குத்தப்பட்டு இருந்தது. ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய பைலட் தனக்கு 39 வயது ஆகிறது. 2 குழந்தைகள் உள்ளதாக உருக்கமாக சொன்ன தகவல் வெளியாகி உள்ளது.

துபாயில் இருந்து இஸ்ரேல் நாட்டின் டெல்அவிவ் நகருக்கு ‘ப்ளைதுபாய்’ என்ற நிறுவனத்தின் விமானம் புறப்பட்டது.

head-and-hands-almost-severed-in-two-says-dentist-who-treated-indian-pilot-in-dubai-tel-aviv-flig

இந்த விமானத்தை இந்தியாவை சேர்ந்த பைலட்டான கேப்டன் ஸ்மித் மச்சார் மற்றும் ஓமன் நாட்டை சேர்ந்த பைலட் ஆகியோர் ஓட்டினர். ஓமன் பைலட் துணை விமானியாக செயல்பட்டார்.

இந்த ஓமன் நாட்டு துணை விமானி, இந்திய பைலட்டான கேப்டன் ஸ்மித் மச்சாரை கத்தியால் குத்திவிட்டு விமானத்தை கடத்தி தரையில் மோதி வெடிக்க வைத்து அனைவரையும் கொல்ல முயன்றதாக கூறப்படுகிறது. இருப்பினும் கத்திக்குத்து காயமடைந்த இந்திய பைலட் ஸ்மித் மச்சார் மற்றும் பிற பயணிகள் உதவியுடன் இந்த முயற்சி முறியடிக்கப்பட்டது.

ஓமன் துணை விமானியை பயணிகள் சிறை பிடித்ததோடு, பணி முடித்து விமானத்தில் இஸ்ரேல் பயணித்த 2 விமானிகள் விமானத்தை வெற்றிகரமாக இயக்கி சவுதி அரேபியாவின் தாபுக் விமான நிலையத்தில் தரையிறக்கினர்.

இந்த சம்பவத்தில் ஹீரோ இந்திய பைலட் ஸ்மித் மச்சார் தான். கத்திக்குத்து காயம் அடைந்து இருந்தாலும் அவர் தான் காக்பிட் கதவை திறந்து பயணிகளை உள்ளே அனுமதித்து ஓமன் துணை விமானியின் செயலை தடுத்து நிறுத்தினார். இதற்கிடையே தான் இந்திய பைலட் ஸ்மித் மச்சார் குறித்த உருக்கமான தகவல் வெளியாகி உள்ளது.

கத்திக்குத்தால் பாதிக்கப்பட்ட இந்திய பைலட் ஸ்மித் மச்சாருக்கு விமானத்தில் முசயேவ் சோட்டா என்பவர் முதலுதவி சிகிச்சை அளித்தார். இவர் பல் மருத்துவர் ஆவார். இவர் தான் உரிய நேரத்தில் ஸ்மித் மச்சாருக்கு முதலுதவி சிகிச்சை அளித்தார். இதனால் தான் தற்போது ஸ்மித் மச்சார் உயிரோடு இருக்கிறார்.

இதுபற்றி பல் மருத்துவர் முசயேவ் சோட்டா கூறுகையில், ”பைலட் கத்திக்குத்து காயத்தில் துடித்ததும் நான் கொஞ்சம் கூட காத்திருக்கவில்லை. ஏதோ தவறு நடந்துள்ளது என்று உணர்ந்தேன். உடனடியாக ஓடிச்சென்று மீட்டோம். பைலட் மிகவும் மோசமான நிலையில் இருந்தார்.

அவரது தலை மற்றும் கைகளில் இருந்து நிறைய ரத்தம் வெளியேறியிருந்தது. தலையும், கைகளும் கிட்டத்தட்ட இரண்டாக பிளக்கப்பட்டு இருந்தது. கொஞ்சம் விட்டிருந்தால் தலையும், கைகளும் இரண்டு துண்டுகளாக பிரிக்கப்பட்டு இருந்திருக்கும். பைலட்டின் உடல் முழுவதும் வெட்டுக்காயம் இருந்தது.

அந்த விமானத்தில் பயணித்த ஒரே டாக்டர் நான் தான். இதனால் அவரது உடலில் இருந்து வெளியேறும் ரத்தத்தை முதலில் நிறுத்தினேன். விமானம் தரையிறங்குவதற்கு சற்று நேரத்துக்கு முன்பு வரை பைலட்டின் உட்நிலை ஓரளவு சீராகவே இருந்தது. ஆனால் அதன்பிறகு அவரது உடல்நிலை மோசமானது. இதற்கு முக்கிய காரணம் அவரது உடலில் இருந்து நிறைய ரத்தம் வெளியேறியது தான்.

ரத்தம் வெளியேறியபோது அந்த பைலட் என்னிடம் பேசினார். தனக்கு 39 வயது ஆகிறது. 2 குழந்தைகள் இருப்பதாக தெரிவித்தார். அதோடு துணை விமானி தன்னை திட்டி கத்தியால் கத்தி தாக்கியதாக தெரிவித்தார்” என்று கூறியுள்ளார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *