கன்னியாகுமரி கடலில் குதித்து கேரள சகோதரிகள் தற்கொலை; திருமணம் ஆகாதது காரணமா? போலீஸ் விசாரணை!

Spread the love

கேரள மாநிலம் கோட்டயத்தைச் சேர்ந்தவர் பிலிப். இவரது மனைவி மேரி. இவர்களுக்கு எலிசபெத்பிலிப், ஆனிபிலிப் (35), மீராபிலிப் (32) என்ற மூன்று மகள்கள் உள்ளனர். இதில் எலிசபெத்பிலிப் திருமணமாகி லண்டனில் வசித்து வருகிறார். ஆனிபிலிப் மற்றும் மீராபிலிப் இருவரும் அமெரிக்காவில் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் ஆண்டிற்கு ஒரு முறை சொந்த ஊரான கோட்டயம் செல்வது வழக்கம். இந்நிலையில் அமெரிக்காவில் இருந்து வந்த இருவரும் ராமேஸ்வரம், மதுரை உள்ளிட்ட இடங்களை சுற்றி பார்த்துவிட்டு கடந்த 26-ம் தேதி மாலை கன்னியாகுமரிக்கு வந்தனர். அங்குள்ள ஒரு லாட்ஜில் தங்கி இருந்தனர்.  இருவரும் வெளியே சென்ற நிலையில் லாட்ஜிக்கு திரும்பவில்லை. இரண்டு நாட்களாகியும் லாட்ஜுக்கு திரும்பாததால் லாட்ஜ் ஊழியர்கள் அவர்கள் கொடுத்த மொபைல் நம்பரில் தொடர்பு கொண்டு அவரது தாயாரிடம் தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து மாயமான பெண்களின்  தந்தை பிலிப்பின் அண்ணன் ஷீஷ என்பவரும் அவரது உறவினரும் கன்னியாகுமரிக்கு வந்து மாயமான சகோதரிகளை பல இடங்களை தேடினர். இருவரை பற்றி எந்த தகவலும் கிடைக்காததால்  கன்னியாகுமரி போலீசில் புகார் செய்தனர். புகாரின் பேரில் எஸ்ஐ வினிஸ் பாபு தலைமையிலான போலீசார், வழக்கு பதிவு செய்து மாயமான சகோதரிகளை  தேடி வந்தனர்.

மீட்கப்பட்ட உடல்கள்

மீட்கப்பட்ட உடல்கள்

இந்நிலையில் கன்னியாகுமரியில் உள்ள சி.சி.டி.வி காட்சியின் அடிப்படையில் மாயமான இரண்டு சகோதரிகளையும் போலீஸார் தீவிரமாக  தேடி வந்தனர். இதற்கிடையே அவர்களது உடல்கள் கன்னியாகுமரி வாவத்துறை கடல் பகுதியில் கரை ஒதுங்கியது. தகவல் அறிந்த கன்னியாகுமரி டி.எஸ்.பி ஜெயச்சந்திரன் தலைமையில் போலீஸார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் மெடிக்கல் காலேஜ் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இறந்த சகோதரிகள் தற்கொலை செய்துகொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது. அவர்கள் தங்கள் பெற்றோர் மற்றும் மூத்த சகோதரிக்கு அனுப்பிய மெசேஜில், “எங்களை வளர்த்து ஆளாக்கிய பெற்றோருக்கு நன்றி. உங்களை நாங்கள் சிரமப்படுத்த விரும்பவில்லை. எங்களது உடலை கன்னியாகுமரியில் அடக்கம் செய்யுங்கள்” என குறிப்பிட்டுள்ளனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *