“தலைவன் தலைவி’ திரைப்படத்திற்குப் பிறகு இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் ‘பரிமளா & கோ’.
ஜெயராம், ஊர்வசி, சஞ்சனா, அனந்திகா, மிஷ்கின், சாண்டி ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.
திரைப்படம் இம்மாதம் 28-ம் தேதி திரைக்கு வரும் நிலையில் படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு நேற்று சென்னையில் நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டு பேசிய மிஷ்கின், “தமிழ்நாட்டில் முதலமைச்சர் விஜய்யின் ஆட்சி சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
பரப்புரையின் சமயத்தில் அவர் கன்னியாகுமரி சென்ற போதே மக்கள் எழுச்சி சுனாமியாக இருந்ததை நான் பார்த்தேன்.