`கரீனா கபூர் அணிந்த 200 ஆண்டு பழமையான மரகத நெக்லஸ்’ – திருக்குர்ஆன் வசனம் இடம்பெற்றதால் சர்ச்சை!| ‘200-year-old emerald necklace worn by Kareena Kapoor’ – Controversy inclusion of a Quranic verse!

Spread the love

பாலிவுட் நடிகை கரீனா கபூர் கான் தீபாவளி பண்டிகையையொட்டி அணிந்திருந்த ஆபரணம் ஒன்று, மத உணர்வுகளைப் புண்படுத்துவதாகக் கூறி பெரும் சர்ச்சையில் சிக்கியுள்ளது. தீபாவளி கொண்டாட்டத்தின் போது, பாரம்பரிய உடையணிந்த புகைப்படங்களை கரீனா கபூர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். ஆடை வடிவமைப்பாளர் புனித் பலானா வடிவமைத்த வெள்ளி நிற கஃப்தான் உடை மற்றும் தலைப்பாகையுடன் கரீனா இருக்கும் புகைப்படங்களை ரியா கபூர் பகிர்ந்திருந்தார். அதில், போபால் நவாபிற்குச் சொந்தமான 200 ஆண்டுகள் பழமையான “கல்கி’ மற்றும் போபால் பேகத்திற்குச் சொந்தமான 30 காரட் மரகத நெக்லஸ் ஆகியவற்றை கரீனா அணிந்திருந்தார்.

இவை கரீனாவின் கணவர் சைஃப் அலிகானின் பாட்டியும், போபால் நவாபின் மகளுமான சஜிதா சுல்தான் வழியாக வந்த அரச குடும்பத்துப் பாரம்பரிய நகைகள் என்பது குறிப்பிடத்தக்கது. அந்தப் புகைப்படங்களில் கரீனா அணிந்திருந்த போபால் அரச குடும்பத்து பதக்கத்தில், திருக்குர்ஆனின் புனித வசனமான ‘ஆயத்துல் குர்ஸி’ (Ayat-ul-Kursi) பொறிக்கப்பட்டிருப்பதாக இணையத்தில் விவாதங்கள் எழுந்தன.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *