அப்படித்தான் ஒரு நாள் எங்கள் ஊழியர், ‘ஸ்கேன் எடுக்க இரண்டு பேர் காரில் வருகிறோம்’ என்று சொன்னதும், புரோக்கர் ராதிகா, உடனே ரூ. 46 ஆயிரம் செலவாகும் என்று சொல்ல ஒப்புக்கொண்டதும், ‘கிருஷ்ணகிரியிலிருந்து இன்னொரு கர்ப்பிணியும் வருகிறார், அவரையும் உங்கள் காரிலேயே கூட்டி வந்திடுங்கள்’ என்று சொன்னதற்கும் ஒப்புக்கொண்டோம். காரை ஓமலூருக்கு முன்பே நிறுத்தி, எங்கள் பெண் ஊழியர்களுக்கு உறவினர் என்று உடன்சென்றவர்களை அங்கேயே இருக்க சொல்லிவிட்டு அவர்களை மட்டும கூட்டிச் சென்றார்கள்.
நாங்கள் டிராக் ஆன் செய்து கொடுத்த மொபைலை சைலண்ட் மோடில் மறைத்து எடுத்துச் சென்றதால் நாங்கள் ஒரு காரிலும், இரண்டு டூவீலரிலும் பின் தொடர்ந்து ஸ்கேன் சென்டர் நடத்திய முத்துநாயக்கன்பட்டி கிராமத்துக்குள் சென்றோம். எங்கள் ஊழியர்களை வீட்டுக்குள் கூட்டிச்சென்று ஸ்கேன் எடுக்க தயாரானபோது, உள்ளே புகுந்துவிட்டோம். உடனே உஷாரனவர்கள் ஸ்கேன் கருவிகளை அன்கேயே விட்டுவிட்டு பின்வாசல் பக்கமாக தப்பி விட்டனர்.

சேலம் மாவட்ட சுகாதார நலப்பணிகள் இணை இயக்குநர் டாக்டர் நந்தினி அளித்த புகாரில் தொளசம்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து ஸ்கேன் எடுக்க வந்த கர்ப்பிணிகள் குறித்து தற்போது விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஸ்கேன் டெக்னீஷியன் சுகுமாரை ஏற்கனவே இதே குற்றத்துக்காக திருப்பத்தூரில் பிடித்து சிறைக்கு அனுப்பினோம். குண்டாஸ் போட்டும் வெளியில் வந்து இந்த குற்றத்தை தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறார். அதுபோல் கனகவல்லி மீதும் சட்டவிரோத கருக்கலைப்பு, ஸ்கேன் பார்த்தது என 6 வழக்குகள் உள்ளன.
டாக்டர்கள் ரிடர்ன் செய்யும் ஸ்கேன் மெஷினை விதிகளை மீறி வாங்கி வந்து பயன்படுத்தி வருகிறார்கள். அதுகுறித்தும் விசாரித்து வருகிறோம்.