கட்டிலில் இரு குழந்தைகள் மயங்கிய நிலையிலும், இம்ரான் கழுத்து அறுக்கப்பட்ட நிலையிலும் கிடந்தனர். உடனே இதுபற்றி போலீசாருக்கு ஹோட்டல் நிர்வாகத்தினர் தகவல் கொடுக்க, விரைந்து வந்த போலீசார் மூவரையும் மீட்டு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
செல்லும் வழியிலேயே இரண்டு சிறுமிகளும் பரிதாபமாக இறந்தனர். இம்ரானுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தியதில், இம்ரானின் மனைவிக்கும் ஒரு வாலிபருக்கும் இடையே திருமணம் மீறிய உறவு இருந்துள்ளதை அறிந்த நிலையில், இம்ரானுக்கும் அவர் மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டிருக்கிறது. வாலிபருடனான தொடர்பை துண்டித்துக்கொள்ள கேட்டுக்கொண்டும் மனைவி அதை பொருட்படுத்தாமல் நட்பைத் தொடர்ந்ததாக சொல்லப்படுகிறது.
இதனால் விரக்தியடைந்த இம்ரான், இரு மகள்களையும் அழைத்து வந்து ஹோட்டலில் தங்கியுள்ளார். மகள்களை கழுத்தை நெரித்து கொன்றுவிட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார் என்பது தெரிய வந்தது. மேலும், அந்த அறையில் கைப்பற்றப்பட்ட இம்ரான் எழுதிய கடிதமும் கிடைத்தது. அதில், “என் மனைவியின் திருமணத்திற்கு புறம்பான உறவால் எனக்கு வாழ்க்கை வெறுத்துவிட்டது. அவளது செயலை நிரூபிக்க என்னிடம் ஆதாரம் உள்ளது. ஆனாலும், அவள் என்னை காயப்படுத்திவிட்டாள். அதனால் என் மகள்களை என்னுடன் அழைத்துச் செல்கிறேன்” என்று குறிப்பிடப்பட்டிருக்கிறார். இந்தச் சம்பவம் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.