“கரூரில் ஜவுளி பரிசோதனை மையம்” – மத்திய ஜவுளித்துறை அமைச்சர் தகவல் | “Textile Testing Centre in Karur” – Union Textile Minister’s announcement

Spread the love

கரூர் ஜவுளி உற்பத்தியாளர்கள், ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் பொன்விழா கொண்டாட்டம் கௌரவத் தலைவர் அட்லஸ் M.நாச்சிமுத்து மற்றும் தலைவர் P.கோபாலகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்ட மத்திய ஜவுளித்துறை அமைச்சர் கிரிராஜ் சிங் பேசுகையில், “கரூர், தமிழ்நாட்டின் ஜவுளித் தலைநகரம் மட்டுமல்ல, இந்தியாவின் முக்கிய ஜவுளி மையங்களில் ஒன்றாகும். இது, சுமார் 7 லட்சம் பேருக்கு நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்பை வழங்கி வருகிறது.

தற்போது, ஜவுளி பரிசோதனை மற்றும் சான்றளிப்புக்காக உற்பத்தியாளர்கள் திருப்பூர் அல்லது குருகிராமிற்குச் செல்ல வேண்டியுள்ளது. அத்தகைய பரிசோதனை மற்றும் சான்றளிப்பு வசதி விரைவில் கரூரிலேயே அமைக்கப்படும் என்று நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன்.

தமிழகத்தில் இருந்து குறிப்பாக திருப்பூர், கரூர் மாவட்டங்களில் இருந்து ஜவுளி ஏற்றுமதி வெளிநாடுகளுக்கு அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்படுவது நாட்டுக்கே பெருமை அளிக்கிறது. ஜவுளி தொழிலாளர் 50 சதவிகிதத்துக்கும் மேற்பட்ட பெண்கள் இத்தொழிலில் ஈடுபட்டு வருவது விவசாயத்திற்கு அடுத்தபடியாக ஜவுளி தொழில் பெண்களுக்கு மிகப்பெரிய வாழ்வாதாரத்தை வழங்கி வருகிறது.

ஒரு நாடு மிகப்பெரிய முன்னேற்றம் அடைவதற்கு பெண்களின் பொருளாதாரத் தன்னிறைவு மிக அவசியம். இதனால்தான், இந்தியப் பிரதமர் பெண்களின் முன்னேற்றத்திற்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறார். இந்திய நாட்டின் உற்பத்தி பொருள்கள் உலக அளவில் மிகப்பெரிய சந்தையைக் கொண்டுள்ளது. அதில் ஜவுளி உற்பத்தி பொருட்கள் முக்கியப் பங்கு வகிக்கிறது.

கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் (MP) ஜோதிமணி மற்றும் அவரது காங்கிரஸ் கட்சி முந்தைய அரசாங்கத்திலும் இருந்தனர். இப்போது, தற்போதைய ஆளும் TVK அரசாங்கத்திலும் இருக்கிறார்கள் என்பதால், எனக்கு மத்திய அமைச்சராக வேலை குறைவு” என்றார்

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *