கரூரில் 17 காவல்துறை அதிகாரிகள் ஒரே அடியாக அதிரடி மாற்றம்! – பின்னணி என்ன?

Spread the love

கரூர் டவுன் டிஎஸ்பி செல்வராஜ் தூத்துக்குடி மாவட்டத்திற்கும், குளித்தலை டிஎஸ்பி கடலூர் மாவட்டத்திற்கும், அரவக்குறிச்சி டிஎஸ்பி அப்துல் கபூர் தர்மபுரி மாவட்டத்திற்கும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

கரூர்…

தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் மணிவண்ணன், கரூர் நகர காவல் ஆய்வாளர் அருள் பிரகாஷ் உள்ளிட்ட 10 காவல் ஆய்வாளர்கள் தெற்கு மற்றும் வடக்கு மண்டலத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

தனிப்பிரிவு சிறப்பு உதவி காவல் ஆய்வாளர், தலைமை காவலர்கள் என 5 பேர் தெற்கு மற்றும் வடக்கு மண்டலத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். காவல்துறை தலைமை இயக்குநரகம் மூலமாக இந்த பணியிட மாற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கூண்டோடு அதிரடி மாற்றத்திற்கான காரணம் என்ன? என காவல்துறை வட்டாரத்தில் விசாரித்த போது,

“பொதுவாக ஆளும் கட்சிக்கு ஆதரவாகத்தான் காவல்துறை அதிகாரிகள் செயல்படுவார்கள். மேலும், தனக்கு விசுவாசமாக எந்த அதிகாரி இருப்பர்களோ அவர்களை தனது மாவட்டத்திற்கு கொண்டு வருவது அரசியல்வாதிகளின் வழக்கம் தான்.

ஆனால், அரசுக்கு வேலை பார்த்ததை விட ஆளும் கட்சி அமைச்சருக்கு ஆதரவாக எல்லை மீறிய விசுவாசம் காட்டியதன் விளைவு தான் இன்று எதிர் வினையாக மாறியுள்ளது என்கிறார்கள்.

இடம் மாற்றம் பட்டியலில் உள்ளவர்கள் பெரும்பாலான காவல்துறை அதிகாரிகள் கடந்த ஆண்டு செப்டம்பர் 27ஆம் தேதி கரூரில் நடந்த துயர சம்பவத்தின் போது பணியாற்றியவர்கள் என்பதை விட முன்னாள் அமைச்சரின் விசுவாசிகளாக இருந்தவர்கள் என்கிறார்கள் காக்கி வட்டாரத்தில்.

கடந்த ஐந்து ஆண்டு காலம் முன்னாள் அமைச்சருக்கு விசுவாசமாக இருந்தார்கள் என்பதை விட தற்போது ஆட்சி மாறினாலும், காட்சி மாறினாலும் இன்னும் விசுவாசம் மாறாமல் இவர்களின் ஸ்ஃபை வேலை தொடர்ந்துள்ளது. இதனால் தான் இந்த அதிரடி மாற்றம்’ என்றனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *