‘கரூரில எங்களுக்கு ஒரு கணக்கு வழக்கு இருக்கு, அதை முடிக்காம விட மாட்டோம்’- ஆதவ் அர்ஜுனா காட்டம் | aadjav arjuna speech at tvk joining event about karur incident

Spread the love

தவெக இணைப்பு விழாவில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கலந்துகொண்டார். நிகழ்ச்சி மேடையில் பேசிய அவர், “தமிழக அரசியல் 2026-க்கு முன்பு, 2026-க்கு பின்பு என்று மாறிவிட்டது. விஜய் என்ற முழக்கம் தமிழ்நாட்டில் மட்டும் அல்ல உலகம் எங்கும் ஒலித்துக்கொண்டிருக்கிறது.

இரு விஜயபாஸ்கர்கள் தவெகவில் இணைந்து இருக்கின்றனர். எங்கள் தலைவர் பெயரில் உங்களின் பெயர்கள் ஆரம்பிக்கிறது. உங்களின் வாழ்க்கை அவரைப்போலவே பிரகாசமாக இருக்கும்.

இணைந்து பணி செய்வோம். 75 வருட பண அரசியலை, சாதி அரசியலைத் தூக்கி எறிந்திருக்கிறது தமிழக வெற்றிக் கழகம். சில எம்.எல்.ஏக்கள் இணையும்போது 90 சதவிகித அதிமுக நிர்வாகிகள் தவெகவில் இணைய போகிறார்கள் என்று அவர்களிடம் சொன்னோம்.

ஆதவ் அர்ஜுனா

ஆதவ் அர்ஜுனா

அதேபோல தொண்டர்கள், முன்னாள் அமைச்சர்கள் எல்லாம் இணைகிறார்கள். நேற்று முதலமைச்சர் விஜய்யை சந்தித்த காங்கிரஸ், கம்யூனிஸ்ட், முஸ்லிம் லீக் தலைவர்கள் சொன்ன விஷயம் “நீங்கள் ஆட்சியமைக்க என்ன நிலைபாட்டை வேண்டுமானாலும் எடுப்பீர்கள் என்று நினைத்தோம்.

அதிமுக உடன் பேசுவீர்கள் என்று நினைத்தோம். அப்படியானால் நீங்கள் எளிதாக ஆட்சி அமைத்திருக்கலாம். ஆனால், நீங்கள் ஆதரவு கேட்டது ஐந்து எம்.எல்.ஏக்கள் வைத்திருந்த காங்கிரஸ் கட்சியை…பின், கம்யூனிஸ்ட், முஸ்லிம் லீக் ஆதரவு தருமா என்று அப்போது உங்களுக்கு தெரியாது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *