கொளத்தூரில் கொத்து புரோட்டா போட்டுவிட்டார்கள்!
வாயைத் திறங்கள் சிஎம் என்கிறார்கள். பேசினால் எழுந்து ஓடிவிடுகிறார்கள். இனிமேல் பேசுவதற்கு முன்பு சட்டமன்றத்தில் எல்லாக் கதவுகளையும் மூட சொல்ல வேண்டும். 5 நிமிடங்கள் பேசியதற்கே கொளத்தூரில் கொத்து புரோட்டா போட்டுவிட்டார்கள்.
மேகதாது அணை குறித்து விஜய்க்கு என்னத் தெரியும் என்றெல்லாம் கேட்கிறார்கள். மேகதாது அணை விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் எப்போது ரிஜெக்ட் பண்ணியது. அப்போது யார் ஆட்சியில் இருந்தது. ஸ்டாலின் சார் வேண்டுமென்றே விட்டுவிட்டாரா?
எப்போதும் பேசி பேசி யார் மீதாவது பழி போட்டு மக்களை நடுத்தெருவில் விட்டுவிடுவதா? எனவே, வேலைதான் முக்கியம். மத்திய அரசு மீண்டும் தொகுதி மறுவரையறையக் கொண்டு வருவதாக சொல்கிறார்கள். யார் நம் உரிமையைப் பறித்தாலும் அதை ஏற்க முடியாது. பறிக்கவும் விடமாட்டோம். தீய சக்தியும் தீர்ந்துபோன சக்தியும் கூட்டு கலவாணிகள். இதை இல்லை என்று அவர்களால் நிரூபிக்க முடியுமா? அப்படி முடியுமென்றால் அதை இந்த இடைத்தேர்தலில் நிரூபித்துக் காட்டுங்கள்.

கரூரில் நினைவுச் சின்னம் அமைக்கப்படும்
என் மனதைவிட்டு கரூர் எப்போதும் நீங்கவே நீங்காது. நமக்கு எதிராக நடந்த சதியை, சூழ்ச்சியை அடுத்த தலைமுறைக்கும் தெரியப்படுத்த கரூரில் ஒரு நினைவுச் சின்னம் அமைக்கப்படும். தமிழ்நாடு மக்களே உங்கள் அரசு உங்களுக்காக உழைக்கும். அடிப்படை உரிமைகளை நிறைவேற்ற வேண்டும். இந்த தீய சக்தி நம்மைப் பார்த்து வாஷிங் மிஷன், சோபா மாடல் என விமர்சிக்கிறார்கள்.
தேர்தலிலேயே மக்களுக்கு பணம் கொடுக்காமல் வெற்றி பெற்றோம். அந்தக் கலாச்சாரத்தை அடித்து உடைத்திருக்கிறோம். அப்படி இருக்கும்போது நமக்கு எதற்கு குதிரை, கழுதை பேரமெல்லாம்… மக்கள் நம்முடன் இருக்கிறார்கள். ஊரை அடித்து உலையில் போட்ட கரூர் கம்பெனி ஓனர் ஒருவர் எங்கு இருக்கிறார் என தெரியாமல் ஓடிக்கொண்டே இருக்கிறார்.