கரூர்: கொலை வழக்கில் தலைமறைவான குற்றவாளி; 12 வருடங்கள் கழித்து போலீஸாரிடம் சிக்கியது எப்படி?

Spread the love

கரூர், வெங்கமேடு ரொட்டிக்கடை பகுதியைச் சேர்ந்த ஜெரால்டு என்கிற அடைக்கலம் (வயது: 56), 2014 ஆம் ஆண்டு எஸ்தர் ராணி என்ற பெண்னுடன் முறை தவறிய நட்பில் இருந்து வந்துள்ளார்.

கரூர், செங்குந்தபுரத்தில் உள்ள ஒரு டெக்ஸ் நிறுவனத்தில் எஸ்தர் ராணி வேறொருவருடன் பழக்கமானதால், எஸ்தர் ராணியை 2014 ஆம் ஆண்டு கொலை செய்து விட்டு, தலைமறைவாக இருந்த நிலையில் கரூர் நகர போலீஸார் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.

கரூர் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்தது. பின்னர், கரூர் நீதிமன்றத்தில் ஜாமீன் பெற்று வழக்கில் ஆஜராகாமல், கடந்த 12 வருடங்களாகத் தலைமறைவாக இருந்து வந்தார்.

இந்நிலையில், திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவர் M.R. சிபி சக்கரவர்த்தி மேற்பார்வையில் கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் B.ரகுபதி தலைமையில் தீவிர தேடுதல் வேட்டை மேற்கொள்ளப்பட்டது.

இது தொடர்பாகக் கடந்த சில நாட்களாக கரூர் மாவட்டத்தில் வாகன தணிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டும் நீதிமன்றத்தால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டு கைது செய்யப்படாமல் தலைமறைவாக உள்ள குற்றவாளிகள் மற்றும் எதிரிகளைக் கண்டறிந்து கைது செய்வதற்குப் கண்காணிப்புப் பணிகள் தீவிரபடுத்தப்பட்டன.

இதன் தொடர்ச்சியாக, கரூர் நகர காவல் நிலைய உதவி ஆய்வாளர் ரமேஷ் தலைமை காவலர்கள் சதீஷ்குமார், முருகேசன், காவலர் செல்வராஜ் போன்றார் அடங்கிய தனிப்படை போலீஸார் குற்றவாளியின் தொடர்புடைய நபர்களின் தொலைபேசி எண்களைத் தொடர்ந்து தீவிர கண்காணிப்பு மேற்கொண்டு வந்தனர்.

இதனிடையே, திருப்பூர் மாவட்டம், வீரபாண்டி அருகே உள்ள சுண்ட மேடு என்ற இடத்தில் உள்ள டெக்ஸ் நிறுவனத்தில் கட்டிங் மாஸ்டராகப் பணியில் இருந்ததைக் கண்டறிந்து, ஜெரால்டு என்கிற அடைக்கலத்தைக் கைது செய்து, விசாரணைக்காக கரூர் நகர காவல் நிலையத்துக்கு போலீஸார் அழைத்து வந்தனர்.

accused

கரூர் மாவட்டத்தில் குற்றச் செயல்களைத் தடுக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரகுபதி நெரூர் அருகே பொதுமக்களைச் சந்தித்து குறைகளைக் கேட்டறியும் நிகழ்ச்சியின் போது செய்தியாளர்களைச் சந்தித்து தெரிவித்தார்.

மேலும், ரவுடிசத்தை ஒழிக்கும் வகையில் தமிழ்நாடு முழுவதும் தமிழக காவல்துறை ரகசிய (Screat Opreation) செயல்பாடுகள் முடுக்கி விடப்பட்டுள்ளது. கரூர் மாவட்டத்தில் சரித்திர பதிவேடு குற்றவாளிகள் 150-க்கும் மேற்பட்டோர் தொடர்ந்து காவல்துறை தீவிர கண்காணிப்பு செய்து வருவதாகவும், இதுவரை ஆறு ரவுடிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகக் கைது செய்யப்பட்டு இருப்பதாகத் தெரிவித்தார்.

12 வருடம் கழித்து கொலை குற்றவாளியை போலீஸார் பிடித்துள்ள சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *