கரூர்: ’26 வருட பணி; சிந்தூர் ஆபரேஷன் வரை பங்கேற்பு!’ – ஓய்வுபெற்ற ராணுவ வீரருக்கு உற்சாக வரவேற்பு கொடுத்த ஊர் மக்கள் – karur people welcomes the person who retired from indian army

Spread the love

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அருகே உள்ள மாயனூர் மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் முத்துசாமி(60). இவர், இந்திய ராணுவத்தில் பணியில் சேர்ந்து வாகா எல்லையில் தொடங்கி பத்தான்கோட், ரஜோரியின் பனிமலை, மதுரா, அசாம், செகந்திராபாத், கார்கில் போர், சிந்தூர் ஆபரேஷன் வரை தேசத்திற்காக பணியாற்றி வந்தார். இந்திய ராணுவத்தில் தன் உயிரை பணயம் வைத்து தொடர்ச்சியாக 26 ஆண்டுகள் தேசத்திற்காக பணியாற்றிய ராணுவ வீரரான முத்துசாமி பணி ஒய்வு பெற்றார். இந்நிலையில், பணிஓய்வுபெற்ற அவர், தனது சொந்த ஊரான மாயனூர் வருகை தந்தார். இதனிடையே, ரயில்வே ஸ்டேஷனில் திரண்ட ஊர் பொதுமக்கள் அவருக்கு மாலை அணிவித்து, செண்டை மேளம் முழங்க, தேசிய கொடிகளுடன் மெயின்ரோடு, மாரியம்மன் கோவில் வரை ஊர்வலமாக அழைத்து சென்றனர்.

அப்போது, ராணுவ வீரர் முத்துசாமி செய்தியாளர்களிடம் பேசினார். அதில்,

“இந்திய ராணுவத்தில் தேசப்பற்று காரணமாக பணியில் சேர்ந்தேன். என்னை பார்த்து பத்துக்கும் மேற்பட்டோர் தங்கள் ஊரில் இருந்து ராணுவப் பணியில் சேர்ந்து இந்திய ராணுவத்திற்கும், இந்திய மக்களுக்கும் பணியாற்றினர் என்பது எனக்கு பெருமை அளிக்க கூடியதாக உள்ளது. அந்த மனநிறைவோடு ஓய்வுபெற்ற எனக்கு, ஊர் மக்கள் இன்னும் இன்ப அதிர்ச்சியை தந்துள்ளனர். இன்று ஊரே ஒன்றுகூடி என்னை ரயில் நிலையத்தில் வந்து வரவேற்றது என்னை மிகவும் நெகிழ்ச்சியடைய செய்கிறது” என்றார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *