“கர்நாடகம் சென்ற விஜய் – காவிரி நீரை கொண்டு வருவாரா?”- தவெக அரசுக்கு திமுக கேள்வி | DMK has raised questions over the failure to release water from the Mettur Dam

Spread the love

காவிரி பாசன மாவட்டங்களில் குறுவை சாகுப்படிக்காக கடந்த சில ஆண்டுகளாக மேட்டூர் அணையிலிருந்து ஜூன் 12 ஆம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டு வரும் நிலையில் இந்தாண்டு தண்ணீர் திறக்கப்படவில்லை.

இதற்கு அரசியல் தலைவர்கள் எல்லோரும் குரல் கொடுத்து வருகின்றனர். அந்த வகையில் இதுதொடர்பாக தி.மு.க, த.வெ.க அரசுக்கு கேள்வி எழுப்பி இருக்கிறது.

தி.மு.க வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “தண்ணீருக்கு வழியில்லாமல் குறுவைத் தொகுப்பா? கர்நாடகம் சென்ற விஜய் – காவிரி நீரைக் கொண்டு வருவாரா?

முதல்வர் விஜய்

முதல்வர் விஜய்

இன்று ஜூன் 12. கடந்த ஐந்தாண்டுகளில் இதே நாளில் காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகளின் குறுவைப் பருவ நெல் சாகுபடிக்காக திராவிட மாடல் அரசின் முதலமைச்சராக இருந்த கழகத் தலைவர் முன்னின்று, மேட்டூர் அணையைத் திறந்து வைப்பது வழக்கம்.

அதற்கு முன்பாகவே ஆறுகள், வாய்க்கால்களில் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, கடைமடை வரை தண்ணீர் பாய்வதற்கு வழிவகை செய்யப்பட்டிருக்கும். குறுவை நெல் சாகுபடியில் சாதனை அளவை எட்டியதுடன், வேளாண்துறையில் 9% வளர்ச்சியைக் காட்டியது திராவிட மாடல் அரசு.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *