கலைஞர் பிறந்தநாள்: `முதல்வர் விஜய் முதல் ராகுல் காந்தி வரை’ – தலைவர்களின் அஞ்சலி தொகுப்பு! | On the occasion of Kalaignar Karunanidhi’s birthday, many leaders have paid tribute.

Spread the love

முதல்வர் விஜய் தன் எக்ஸ் பக்கத்தில், “முன்னாள் முதலமைச்சர் முத்தமிழறிஞர் கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் 103-வது பிறந்தநாளில், தமிழ் மொழி, இலக்கியம், திரைத்துறை, அரசியல், ஆட்சி நிர்வாகம் மற்றும் மாநில உரிமைகள் போன்றவற்றில் அவரது பங்களிப்பை நினைவுகூர்கிறேன். முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பிறந்த நாளில் எனது மரியாதை கலந்த வணக்கங்களைச் சமர்ப்பிக்கிறேன்.” என மரியாதை செலுத்தியிருக்கிறார்.

விசிக தலைவர் தொல்.திருமாவளவன், “சமத்துவப் பெரியர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பிறந்தநாளில் அவருக்கு எமது செம்மாந்த வீரவணக்கத்தைச் செலுத்துகிறோம். சமூகநீதி மண்ணாய்த் தமிழகத்தைச் சமைத்த மகத்தான கருத்தியல் பேராளுமை கலைஞர். பெரியாரின் கனவை நனவாக்கும் வகையில் சமத்துவபுரம் கண்ட சமூகப்புரட்சியாளர் கலைஞர். உயர்கல்வி மேம்பாடு, தகவல் தொழில் நுட்பம், எளியோருக்கான அதிகாரவலிமை போன்றவற்றை நிலைநாட்டி, புதியதொரு தமிழ்நாட்டைச் செதுக்கிய அவரது போற்றுதலுக்குரிய பங்களிப்பை நன்றிப்பெருக்கோடு நினைவுகூர்வோம்!” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, “கலைஞரின் பிறந்தநாளில் எனது மதிக்கத்தக்க அஞ்சலிகள். தமிழகத்தின் அன்பிற்குரிய தலைவரான அவரது சமூக நீதி, சமத்துவம், பகுத்தறிவு மற்றும் ஜனநாயக விழுமியங்கள் மீதான வாழ்நாள் அர்ப்பணிப்பு, எண்ணற்ற மக்களின் வாழ்க்கையை மறுமலர்ச்சி அடையச் செய்தது. கலை மற்றும் இலக்கியம் உள்ளிட்ட பொதுவாழ்விற்கு கலைஞர் கருணாநிதி அவர்கள் ஆற்றிய அளப்பரிய பங்களிப்பு, என்றும் ஆழமான மரியாதையுடன் நினைவு கூறப்படும்.” எனப் புகழ்ந்திருக்கிறார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *