`கலையால் வாழ்ந்த எனக்கு, அதை காக்க வேண்டிய பொறுப்பும் இருக்கு!’ – பாரம்பர்ய மரக்கா செய்யும் முதியவர்

Spread the love

தற்போது அளவைக்கு இயந்திர எடை மெஷின் வந்து விட்டதால் மரக்கா போன்றவையின் பயன்பாடு முற்றிலுமாக அழிந்து விட்டது. இதை செய்வதையும் நிறுத்தி விட்டனர். வெளி நாடுகளில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகள் நம்முடைய பாரம்பர்ய பொருள்களில் ஒன்றான மரக்காவை பார்த்து வியந்து பேசுவார்கள். அப்போது தான் நம் கலாசாரமான மரக்காவை நான் மீண்டும் செய்ய ஆரம்பித்தேன். நம் பாரம்பர்ய பொருளை மீட்கவும், அழியாமல் பாதுகாக்கவும் இதை செய்து வருகிறேன். மரக்காவை அளவைக்கு பயன்படுத்தவில்லை என்றாலும் காட்சிப்பொருளாக வைத்து கொள்வதற்கு மரக்காவை வாங்கி செல்கின்றனர். ஆர்டர் வருவதன் பேரில் அதற்கேற்ற அளவில் மரக்கா செய்கிறேன்.

மரக்கா செய்யும் பரமசிவம்

மரக்கா செய்யும் பரமசிவம்

தஞ்சாவூர் தட்டு எப்படி செய்யப்படுகிறதோ அதே முறையில் பித்தளை, வெள்ளி, செம்பு ஆகியவற்றை பயன்படுத்தி மரக்கா செய்கிறேன். தற்போது 15 கிலோ அளக்க கூடிய மரக்கா செய்துள்ளேன். இதன் மதிப்பு ரூ.1 லட்சம். நான் கற்றுக்கொண்ட கலை எனக்கு சோறு போட்டது. கலையால் வாழ்ந்

த எனக்கு பாரம்பர்யத்தை காக்க வேண்டிய பொறுப்பும் இருக்கிறது. நடவு உள்ளிட்ட விவசாய பணிகளை தொடங்கும் போது மரக்கா நிரம்ப நெல் கொட்டி வைத்து வணங்கிய பிறகே வேலையை செய்வார்கள். அந்த அளவுக்கு நம் உணர்வில் கலந்திருக்கும் மரக்காவுக்கு உயிரூட்டுகிறேன்” என்றார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *