CJP: ஒருவருக்கு பின்னால் எல்லா அரசியல் தலைவர்களும் ஓடுவது விந்தையாக இருக்கிறது! துணை குடியரசு தலைவர்

Spread the love

குடியரசு துணை தலைவர் சி.பி ராதாகிருஷ்ணன் இரண்டு நாள்கள் பயணமாக தமிழ்நாட்டிற்கு வந்திருந்தார். திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் உள்ள அவிநாசி லிங்கேஸ்வரர் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். ராதாகிருஷ்ணன் மட்டுமின்றி அவரின் குடும்பத்தினர் மற்றும் தமிழ்நாடு ஆளுநர் ஆகியோர் உடனிருந்தனர். சாமி தரிசனத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் காக்ரோச் ஜனதா பார்ட்டி போராட்டம் குறித்து பேசிய சி.பி ராதாகிருஷ்ணன், “அரசியல் தலைவர்கள் எப்போதுமே மக்களின் உண்மையான உணர்வுகளையும் தேவைகளையும் துல்லியமாகப் புரிந்து கொண்டு அதற்கேற்ப தங்களின் அரசியல் செயல்பாடுகளை முன்னெடுக்க வேண்டும்.

யாரோ ஒரு என்.ஆர்.ஐ ஒருவர் திடீரென ஞானோதயம் வந்ததைப் போல ஒன்றைச் சொல்கிறார். அவருக்குப் பின்னால் எல்லா அரசியல் தலைவர்களும் ஓடுவது என்பது விந்தையாக இருக்கிறது. இது உண்மையிலேயே மன மகிழ்ச்சி தருகின்ற நிகழ்வு அல்ல. இதற்கு மேல் நான் எதுவும் சொல்ல விரும்பவில்லை” என்றார். குடியரசு துணை தலைவரின் இந்த 2 நாள் வருகை காரணமாக திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்ததோடு, ட்ரோன்கள் பறக்கவும் தடை விதிக்கப்பட்டிருந்தது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *