Tamilnadu
oi-Nantha Kumar R
கள்ளக்குறிச்சி: பெண் கலெக்டரான ஐஏஎஸ் அதிகாரிக்கு ஆபாச மெசேஜ் அனுப்பிய வழக்கில் கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் கைது செய்யப்பட்டுள்ளார். 2 நாட்களாக அருள் விக்னேஷிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்ட நிலையில் இன்று அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தவெக சார்பில் கள்ளக்குறிச்சி சட்டசபை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் அருள் விக்னேஷ். இவர், மாவட்ட கலெக்டராக இருக்கும் பெண் ஐஏஎஸ் அதிகாரிக்கு ஆபாசமாக குறுஞ்செய்தி அனுப்பியதாக புகார் எழுந்தது.
இதனை தவெகவினர் மறுத்து வந்தனர். சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி அருள் விக்னேஷ் மீது கள்ளக்குறிச்சி மகளிர் காவல் நிலையம் சார்பில் 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
நேற்று முன்தினம் வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில் அருள் விக்னேஷ் வீட்டை விட்டு வெளியே வராமல் இருந்தார். இந்நிலையில் தான் இன்று மாலை 6.15 மணிக்கு தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் கைது செய்யப்பட்டார். கள்ளக்குறிச்சியில் உள்ள அவரது வீட்டில் இருந்த அருள் விக்னேசை போலீசார் கைது செய்து கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு அழைத்து சென்றனர்.