இயக்குநர் சிம்புதேவனின் படங்களில், எப்போதும் அவரின் கதாபாத்திரத்தின் பெயர்கள் வித்தியாசமாக, நகைச்சுவை அம்சத்தோடு இருக்கும்.
அது குறித்துப் பேசியவர், “நான் அடிப்படையில் ஒரு கார்ட்டூனிஸ்டாக இருந்ததால், இது போன்ற வித்தியாசமான பெயர்களையும் கதாபாத்திரங்களையும் என்னால் எளிதாக உருவாக்க முடிகிறது.
அங்கிருந்து கிடைத்த அனுபவம்தான் இதற்குக் காரணம். ஒரு இயக்குநர் கட்டாயம் எழுத்தாளராகவும் இருக்க வேண்டும் என்று அவசியமில்லை.

ஆனால், எழுத்தாளராகவும் இருக்கும்போது இதுபோன்ற விஷயங்கள் படத்திற்குக் கூடுதல் பலமாக அமையும்” என்றவர் முதல்வர் விஜய் பற்றி, “விஜய் சார் மிகவும் நேர்மையாகவும், முழு அர்ப்பணிப்புடனும் பணியாற்றக்கூடிய நபர். எந்தத் துறையில் இறங்கினாலும் அதில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்வார்.
அதனால், நான் அவரைப் போய்த் தொந்தரவு செய்ய விரும்பவில்லை, அவ்வளவுதான். நாங்கள் எப்போதும் தொடர்பில் இருக்கிறோமே தவிர, தொடர்பில் இருக்கிறோம் என்பதற்காக எல்லா இடத்திலும் உள்ளே போய் நுழைய வேண்டும் என்கிற அவசியம் இல்லை” எனப் பேசினார்.