கள்ளக்குறிச்சி பெண் கலெக்டருக்கு தவெக எம்எல்ஏ மெசேஜ்? கனிமொழி கண்டனம்.. அருள் விக்னேஷ் மறுப்பு | Kallakurichi Woman Collector Receives Message from TVK MLA? Kanimozhi Condemns, Arul Vignesh Denies Allegations

Spread the love

Tamilnadu

oi-Hema Vandhana

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டருக்கு தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் தவறான நோக்கத்தில் மெசேஜ் அனுப்பியதாக சோஷியல் மீடியாவில் தகவல் பரவி வருகிறது. இந்த விவகாரம் தொடர்பாக திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார். ஆனால், தன் மீதான குற்றச்சாட்டுகள் முற்றிலும் பொய்யானவை என்றும், திமுக ஐடி விங் மூலமாகப் பரப்பப்படும் தகவல் என்றும் எம்எல்ஏ அருள் விக்னேஷ் மறுத்துள்ளார்.

கள்ளக்குறிச்சி தொகுதி தவெக எம்எல்ஏவாக இருப்பவர் அருள் விக்னேஷ்.. இவருக்கு 36 வயதாகிறது.. கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டராக பத்மஜா பணியாற்றி வருகிறார்.

Kallakurichi TVK News Tamil Nadu Politics

இந்நிலையில், கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கலெக்டர் பத்மஜாவுக்கு எம்எல்ஏ அருள் விக்னேஷ் மதுபோதையில் வாட்ஸ்அப் மூலம் தவறான கண்ணோட்டத்தில் மெசேஜ் அனுப்பியதாகவும், இரவு நேரத்தில் கலெக்டரின் வீட்டுக்கு சென்று எம்எல்ஏ தொந்தரவு செய்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

கள்ளக்குறிச்சி கலெக்டருக்கு மெசேஜ்

அதுமட்டுமல்ல, எம்எல்ஏ அனுப்பியதாக கூறப்படும் மெசேஜ் குறித்து கலெக்டர் பத்மஜா, கட்சியின் மூத்த அமைச்சர் ஒருவரின் கவனத்துக்கு கொண்டு சென்றாராம்… உடனே, சம்பந்தப்பட்ட எம்எல்ஏவை நேரில் அழைத்து கலெக்டரிடம் வருத்தம் தெரிவிக்க வைத்து சமரசம் செய்தாராம் அந்த மூத்த அமைச்சர்.. இதற்கு பிறகு அரசு நிகழ்ச்சிகளில் கலெக்டரும், எம்எல்ஏவும் ஒன்றாக பங்கேற்பதை தவிர்த்து வருவதாகவும் கூறப்படுகிறது.

மேற்கண்ட தகவல்கள் எல்லாம் வாட்ஸ்அப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

எம்எல்ஏ மறுப்பு

ஆனால், தன் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து எம்எல்ஏ அருள் விக்னேஷ் முற்றிலுமாக மறுத்துள்ளார். “கலெக்டருக்கு நான் எதுக்காக மெசேஜ் அனுப்ப வேண்டும்? ஒரு மாவட்டத்தின் உயர் பதவியில் இருக்கும் அதிகாரியிடம் தவறான கண்ணோட்டத்தில் எப்படி நடந்துகொள்ள முடியும்? கலெக்டருக்கு எந்தத் தவறான நோக்கத்திலும் மெசேஜ் அனுப்பவில்லை. ஒரு மாவட்டத்தின் உயர் அதிகாரி வீட்டுக்கு சென்று பிரச்சினை செய்ததாக சொல்வதை யாராவது ஏற்றுக்கொள்வார்களா?

இது முழுக்க முழுக்க திமுக ஐடி விங் மூலமாகப் பரப்பப்படும் பொய்யான தகவல்.. கடந்த திமுக ஆட்சியில் மாவட்ட பொறுப்பு அமைச்சராக இருந்த வேலு, வசந்தம் கார்த்திகேயன் எம்எல்ஏ ஆகியோர் அடிப்படை வசதிகள் இல்லாமல் கள்ளக்குறிச்சி புதிய பஸ் ஸ்டாண்டை வைத்திருந்தனர்.. பஸ் ஸ்டாண்டை சுற்றியுள்ள இடங்களில் பிளாட் போட்டு பல கோடி ரூபாய் முறைகேடும் நடந்துள்ளது.

இப்போது அந்த பஸ் ஸ்டாண்டை சிறப்பாக மாற்றுவதற்கு நான் தீவிரமாக நடவடிக்கை எடுத்து வருகிறேன். என் மீது வீண்பழி சுமத்தி தவெக ஆட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்த முயற்சி நடக்கிறது” என்று அருள் விக்னேஷ் தெளிவுபடுத்தியுள்ளார்.

கனிமொழி கண்டனம்

இதனிடையே, இந்த விவகாரம் தொடர்பாக திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

கள்ளக்குறிச்சி கலெக்டருக்கு, தவெக எம்எல்ஏ அருள்விக்னேஷ், ஆபாச குறுந்தகவல் அனுப்பியதாகவும், மது போதையில் அவரது வீட்டுக்கே சென்று தொந்தரவு செய்ததாகவும், அதைத் தொடர்ந்து கலெக்டருக்கு தனி பாதுகாப்பு அதிகாரி நியமிக்கப்பட்டதாகவும், சமூக வலைதளங்களில் செய்திகள் வருகின்றன.

விஜய் பதில் என்ன?

தவெக எம்எல்ஏ ஒருவரால், கலெக்டருக்கே பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. அப்படியிருக்க தனி பாதுகாப்பு அதிகாரியை நியமிப்பதன் வாயிலாக மட்டும், தலைமை செயலர் அந்த கலெக்டருக்கு என்ன பாதுகாப்பை கொடுத்து விடப் போகிறார்; முதல்வர் இதற்கு என்ன பதில் சொல்ல போகிறார்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

எம்எல்ஏ மீதான குற்றச்சாட்டுகள் சோஷியல் மீடியாவில் பரவி வரும் நிலையில், இன்னொருபுறம் அவை அரசியல் உள்நோக்கத்துடன் பரப்பப்படும் பொய்யான தகவல்கள் என அருள் விக்னேஷ் மறுத்துள்ளார். இதனால் கள்ளக்குறிச்சி மாவட்ட அரசியல் வட்டாரத்தில் இந்த விவகாரம் கவனம் பெற்றுள்ளது..!!!

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *