‘நாளைக்கு எல்லாரும் சென்னையில இருக்கணும்!’ – எம்.எல்.ஏக்களுக்கு திடீர் அழைப்பு விடுத்த விஜய்! |CM Vijay ordered his MLA’s to be at Chennai Tomorrow

Spread the love

நாளை காலை அத்தனை எம்.எல்.ஏக்களும் சென்னையில் முகாமிட்டிருக்கும்படியும் ஆலோசனைக் கூட்டத்திற்கான நேரம் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் கூறப்பட்டிருக்கிறது. தலைமையிலிருந்து காரணம் சொல்லாமல் திடீரென எம்.எல்.ஏக்கள் கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டதால் அனைவரும் குழப்பத்தில் ஆழ்ந்திருக்கின்றனர்.

TVK Vijay | விஜய்

TVK Vijay | விஜய்

இதுதொடர்பாக நம்மிடம் பேசிய பனையூர் வட்டாரத்தினர் சிலர், “கடந்த மே 13 ஆம் தேதி சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபித்திருக்கிறோம். அரசின் மீது அடுத்த நம்பிக்கையில்லா தீர்மானத்தை நவம்பர் 13 ஆம் தேதிக்கு மேல் கொண்டு வர முடியும். நம்பிக்கையில்லா தீர்மானத்துக்குத் திட்டமிட்டு எங்களின் எம்.எல்.ஏக்களைத் தூக்க எதிர்க்கட்சிகள் திட்டம் போட்டு வருகின்றனர். அதனால் எம்.எல்.ஏக்களைச் சந்தித்து தலைவரே சில ஆலோசனைகளை பெர்சனலாக வழங்கவிருக்கிறார்.

மேலும், சமீபத்தில் சில எம்.எல்.ஏக்களின் செயல்பாடு கடும் விமர்சனங்களைச் சந்தித்திருக்கிறது. அதுவும் முதல்வரை அப்செட் ஆக்கியிருக்கிறது. அப்படிப்பட்ட எம்.எல்.ஏக்களுக்கு முதல்வர் இந்தக் கூட்டத்தில் எச்சரிக்கையும் விடுக்கவிருக்கிறார்’ என்றனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *