`கள்ளக்குறிச்சி MLA ஆபாச தகவல் அனுப்பியது பணியிட துன்புறுத்தல் இல்லையா?' – நீதிபதி விக்டோரியா கௌரி

Spread the love

கள்ளக்குறிச்சி தவெக எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் மாவட்ட ஆட்சியர் பத்மஜாவுக்கு ஆபாசமாக மெசெஜ் அனுப்பியதாக கூறப்படுகிற விவகாரம், தமிழகம் முழுவதும் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த விவகாரத்தில் ஆட்சியர் தரப்பில் எந்த ஒரு பதிலும் சொல்லப்படாத நிலையில் இச்சம்பவம் தொடர்பாகத் தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து விசாரித்து, 7 நாட்களுக்குள் நடவடிக்கை அறிக்கை அளிக்கத் தமிழக டிஜிபி-க்கு உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் இது குறித்து உயர் நீதிமன்ற நீதிபதி விக்டோரியா கெளரி, இது பணியிட துன்புறுத்தல் இல்லையா என கேள்வி எழுப்பியுள்ளார்.

உயர் நீதிமன்ற மதுரைக் கிளை அலுவலர்களுக்கு பாலின உணர்திறன் மற்றும் உள்ளக புகார் குழு சார்பில், பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் தடுப்புச் சட்டம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி மதுரை லேடி டோக் கல்லூரியில் நடைபெற்றது.

கள்ளக்குறிச்சி தவெக எம்.எல்.ஏ அருள் விக்னேஷ்

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசிய நீதிபதி விக்டோரியா கௌரி, “கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு எம்.எல்.ஏ., ஒருவர் ஆபாசமான தகவல் அனுப்பியுள்ளார். இது தொடர்பாக மாவட்ட ஆட்சியரின் கணவர் புகார் அளித்துள்ளார். ஆனால், இதுவரை மாநில அரசின் காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை” என்று தெரிவித்தார். 

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு எம்.எல்.ஏ., ஒருவர் ஆபாசத் தகவல் அனுப்பிய விவகாரத்தைச் சுட்டிக்காட்டி நீதிபதி பேசியது, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *