India
oi-Nantha Kumar R
ஜெய்ப்பூர்: இப்போது சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்று வேகமாக பரவி வருகிறது. அந்த வீடியோவில் ஒரு நபர் இருக்கிறார். அவர் அருகே கட்டுக்கட்டாக ரூ.500 நோட்டுகள் உள்ள நிலையில் அவர் ஒவ்வொரு ரூபாய் நோட்டையும் தீயில் வைத்து சாம்பலாக்குகிறார்.

இந்த வீடியோவை பார்ப்போர் அதிர்ந்து போய் உள்ளது. இது ஏஐ வீடியோவா? இல்லை யாராவது உண்மையிலேயே இப்படி 500 ரூபாய் நோட்டுகளை கட்டுக்கட்டாக எரிக்கிறார்களா? என்று கேள்வி கேட்டு வருகின்றனர்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது பேசும் பொருளாகி உள்ள நிலையில் தான் அதன் பின்னணியில் உள்ள முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.
Heartbroken man sets bundles of cash on fire at nightGyan -Without love money means nothingPart : After his wife left for her parents’ home, this Rajasthan man took out all his anger on piles of cash sources claim. Would you ever do this? https://t.co/ZqNQgFopiO
— Ramesh Speaks (@rameshofficial0) November 19, 2026
‘ஏசியாநெட்’ ஆங்கில ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியில், ”இந்த சம்பவம் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடந்துள்ளது. வீடியோவில் உள்ள இளைஞருக்கு அவரது மனைவி ரூ.22 ஆயிரம் செலவில் ‘கோட்-சூட்’ எடுத்துள்ளார். ஆனால் ‘கோட்-சூட்’ விலையை கேட்ட கணவர் அதிர்ச்சியடைந்தார். எதற்காக இவ்வளவு செலவில் ஆடை எடுக்க வேண்டும் என்று கேள்வி எழுப்பினார்.
அதுமட்டுமின்றி நான் புதிதாக வீடு கட்டுவதற்காக இந்த பணத்தை சேர்த்து வைக்கிறேன். ஆனால் நீயோ விலை உயர்ந்த பொருட்கள் வாங்கி செலவு செய்கிறாய்” என்று கடிந்து கொண்டார். இதுதொடர்பாக இருவருக்குள்ளும் பிரச்சனை ஏற்பட்டது. அதோடு ஆசையோடு வாங்கி வந்ததை கூட கணவர் புரிந்து கொள்ளவில்லையே என்று கோபமான மனைவி, கணவரை விட்டு பிரிந்தார். தனது தாயார் வீட்டிற்கு சென்றார்.
இதனால் அந்த கணவர் விரக்தியடைந்தார். எல்லாவற்றுக்கும் நான் சேமித்த வைத்திருக்கும் பணம் தானே காரணம். இந்த பணம் இருப்பதால் தானே மனைவி விலையுயர்ந்த பொருட்களை வாங்குகிறார். இது இல்லாவிட்டால் என்ன செய்வார்? என்று யோசித்து கடந்த ஓராண்டுகளாக அவர் சேமித்து வைத்த பணத்தை எல்லாம் வங்கியில் இருந்து எடுத்து வந்து தீயில் போட்டு எரித்துள்ளார். இதுதான் வீடியோவாக பரவி வருகிறது” என கூறப்பட்டுள்ளது.
அதேபோல் இந்த வீடியோ பற்றி Pulse News Breaking என்ற எக்ஸ் பக்கத்திலும் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. அதில் பணத்தை எரித்த நபர் ராஜஸ்தானின் ஜெய்ப்பூரை சேர்ந்த மஞ்ஜீத் தாகத் என்று கூறப்பட்டுள்ளது. தற்போது இந்த வீடியோ இணையதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. பலரும் ரூபாய் நோட்டுகளை எரித்த நபரை விமர்சனம் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.