கவின்: `ஒரு பெண்ணை விரும்பினாங்கிறதுக்காக எங்க பிள்ளைய இப்படிக் கொல்லணுமா?’ – பெற்றோர் போராட்டம்!

Spread the love

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “விசாரணைக்குப் பின்னர் ஆதாரங்கள் இல்லையென விடுதலை செய்வதுதான் நீதிமன்றத்திற்கு உள்ள அதிகாரம். குற்ற விசாரணை தொடங்குவதற்கு முன்பே குற்ற அறிக்கையை “ரத்து’ செய்வது ‘தவறான முன்மாதிரி’ ஆகும்” என்றார். “தமிழ்நாடு அரசு இதை எதிர்த்து மேல்முறையீடு செய்திட ஆவண செய்ய வேண்டுமென விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் வலியுறுத்துகிறோம்,” என்றும் தனது பதிவில் தெரிவித்துள்ளார். உயர் நீதிமன்றத்தின் உத்தரவு விசாரணையில் தாக்கம் செலுத்தலாம் என்று கூறும் மனித உரிமைச் செயற்பாட்டாளர் எவிடென்ஸ் கதிர், தமிழ்நாடு அரசு இதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்த்ல் மேல்முறையீடு செய்ய வேண்டுமெனத் தெரிவித்துள்ளார்.    

 இந்த நிலையில், வீட்டின் முன்பு,  உயிரிழந்த கவினின் தந்தை சந்திரசேகர், தாய் தமிழ்ச்செல்வி ஆகிய இருவரும் கவினின் புகைப்படத்தை வைத்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கவினின் பெற்றோரிடம் பேசினோம். “இவ்வளவு நாள்களாக நாங்கள் போராடியது எதற்காக?  போதுமான ஆதாரங்கள் இல்லை என்று கூறி குற்றச்சாட்டுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அப்படியானால், எங்களுக்கான நீதி எங்கே? என் பிள்ளையை ஒரு பெண்ணை விரும்பியதற்காக இப்படிக் கொலை செய்ய வேண்டுமா? இது நியாயமா? ஒரு தாயாக என் மகனை எவ்வளவு கஷ்டப்பட்டு வளர்த்தேன் என்பது எங்களுக்குத்தான் தெரியும்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *