அமைச்சர் சரத் குமார் வீடியோ: “விளக்கமளிக்க வேண்டும்; இல்லையெனில் பதவி விலக வேண்டும்” – தமிழிசை | Minister Sarath Kumar Video: “He must offer an explanation; otherwise, he must resign” – Tamilisai

Spread the love

தவெக அமைச்சர் சரத் குமார் போதைப்பொருள் பயன்படுத்தியது போன்ற வீடியோ ஒன்று வெளியாகி சமூக ஊடகங்களில் வைரலானது.

இது தொடர்பாக பலரும் கேள்வி எழுப்பிவரும் நிலையில், பா.ஜ.க-வின் மூத்த நிர்வாகியான தமிழிசை சௌந்தரராஜன் மயிலாப்பூரில் நடந்த ஒரு நிகழ்வில் கலந்துகொண்டார்.

அதைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, “மயிலாப்பூரில் எங்களுக்கு வெற்றி வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும், மக்களுக்கு நன்றி செலுத்துவதற்காகவும், காப்பீட்டுத் திட்டங்களின் பலன்கள் அவர்களைச் சென்றடைவதற்காகவும் மூன்று நாட்கள் சிறப்பு முகாம் நடத்தப்பட்டது.

முதல்வர் விஜய்

முதல்வர் விஜய்

தமிழ்நாடு முதல்வர் போலியோ சொட்டு மருந்து தினத்தைத் தொடங்கி வைத்தது பாராட்டக்குறியது. ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ, ஸ்டாலினுக்கு முக்கியத்துவம் தருவதை எதிர்த்து தி.மு.க-விலிருந்து வெளியேறி, தொண்டர்கள் தீக்குளித்த சம்பவங்கள் நடந்தும், இறுதியில் அவர்களின் ஆன்மாவை மிதித்துவிட்டு மீண்டும் தி.மு.க-விடமே வைகோ கூட்டணி வைத்தார்.

அவர் எம்.எல்.ஏ-க்கள் பதவி விலகி மீண்டும் தேர்தலை எதிர்க்கொள்வார்களா? இதனால் அரசுக்கு எவ்வளவு இழப்பு… இதுதவிர, வைகோவின் தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்கு தொண்டர்களை கிள்ளுக்கீரையைப் போல பயன்படுத்துகிறார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *