`காக்ரோச், இடதுசாரி போராட்டங்களில் மாணவர்கள் `நோ’ – தமிழக அரசின் சர்ச்சை உத்தரவும் உடனடி வாபஸும்| Students should not participate in cockroach and left-wing protests – Tamil Nadu government

Spread the love

மாணவர்கள், காக்ரோச் ஜனதா கட்சி மற்றும் இடதுசாரி போராட்டங்களில் பங்கேற்பதைத் தடுக்க தமிழக அரசு உத்தரவிட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

இதுதொடர்பாக கல்லூரி கல்வி இயக்ககம் சார்பில் கல்லூரிக் கல்வி ஆணையர் சுற்றறிகையை கல்லூரிகளுக்கு அனுப்பி இருக்கிறார். அந்த அறிக்கையில், “பார்வையில் காணும் அரசு கடிதத்தில், இடதுசாரிக் கட்சிகள் மற்றும் தமிழ்நாடு காங்ரோச் ஜனதா கட்சி நடத்தும் போராட்டங்களில் மாணவ, மாணவிகள் மற்றும் இளைஞர்கள் பங்கேற்பதைத் தடுக்கும் வகையில் பள்ளித் கல்வி, உயர் கல்வி, காவல் துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் ஆகிய துறைகளிடையே துறை இடைத்தொடர்பு மற்றும் ஒருங்கிணைந்த கூட்டு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் மாணவர்கள் போராட்டம்

சென்னையில் மாணவர்கள் போராட்டம்

எனவே, மாணவ, மாணவிகள் மற்றும் இளைஞர்கள் இடதுசாரிக் கட்சிகள் மற்றும் தமிழ்நாடு காங்ரோச் ஜனதா கட்சி நடத்தும் போராட்டங்களில் பங்கேற்பதைத் தடுக்கும் வகையில் உரிய ஒருங்கிணைந்த கூட்டு நடவடிக்கை மேற்கொண்டு, மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் விவரத்தை உடன் இவ்வலுவலகத்திற்கு அனுப்புமாறும் கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

பல்வேறு விவகாரங்களில் மாணவர்களின் பங்கேற்பைக் கட்டுப்படுத்தவும், கல்வி நிலையங்களில் அமைதியை நிலைநாட்டவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது.

இந்த உத்தரவுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து தற்போது இந்த உத்தரவைத் திரும்பப் பெற்றிருக்கிறது தமிழக அரசு.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *