“நீங்கள் கனவு கண்டால் கூட ஆட்சிக்கு வர முடியாது”- அமைச்சர் ஆனந்த்
‘நீங்களாவது குறைச்சொல்லாத அளவிற்கு சாலைகளை அமையுங்கள்’ என்று மாண்புமிகு உறுப்பினர் சொன்னார். கண்டிப்பாக நாங்கள் தரமாகத் தான் செய்வோம். நீங்கள் அய்யோ, கிய்யோன்னுலாம் சொல்ல வேண்டாம். இனி நீங்கள் கனவு கண்டால் கூட ஆட்சிக்கு வர முடியாது என்று தெளிவாகச் சொல்லி கொள்கிறோம்” – சட்டமன்றத்தில் அமைச்சர் ஆனந்த்
“எங்களின் கிராமப்புற சாலைத் திட்டத்தை நீங்கள் (தவெக) பார்த்துவிட்டு பேசவேண்டும்”- திமுக முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமி
“கலைஞர் தான் கிராமப்புற சாலை வசதியைக் கொண்டுவந்தார். காங்கிரஸ் ஆட்சி காலத்திலும் கொண்டுவரவில்லை. எந்த ஆட்சி காலத்திலும் கொண்டுவரவில்லை. 1972-ல் கலைஞர் தான் கொண்டு வந்தார். எங்களின் கிராமப்புற சாலைத் திட்டத்தை நீங்கள் (தவெக) பார்த்துவிட்டு பேசவேண்டும்”- திமுக முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமி
“எதை எப்போது ஓப்பன் செய்ய வேண்டுமோ அதை அப்போது சரியாக ஓப்பன் செய்வோம்”- ஐ.பெரியசாமிக்கு முதல்வர் விஜய் பதிலடி

” ஆதாரம், ஆதாரம் என்று கேட்கிறார்கள். ஒரு வாரத்திற்கு முன்பு மாண்புமிகு நிதியமைச்சர் பேசும்போது ‘3 துறைகளை ஆராய்ந்து அதற்கானக் கோப்புகளை வைத்திருக்கிறோம்’ என்றார். அவர் அதைப் போரப்போக்கில் சொல்லவில்லை. உண்மையிலேயே என் டேபிளிலில் இருக்கிறது. அத்தனையும் ஆதரங்களுடன் இருக்கிறது. ஓப்பன் பண்ண வைத்துவிடாதீர்கள். எதை எப்போது ஓப்பன் செய்ய வேண்டுமோ அதை அப்போது சரியாக ஓப்பன் செய்வோம்” என்று திமுக எம்எல்ஏ ஐ.பெரியசாமிக்கு முதல்வர் விஜய் பதிலடி கொடுக்கும் வகையில் பேசியிருக்கிறார்.
முன்னதாக, ஐ.பெரியசாமி, ஆளும்கட்சி உறுப்பினர்கள் ஆதாரத்துடன் பேச வேண்டும் என பேசியது குறிப்பிடத்தக்கது.
அதிமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு
அதிமுகவின் கவன ஈர்ப்பு தீர்மானத்தை இன்றே எடுக்க வலியுறுத்தி சட்டப்பேரவையில் இருந்து அதிமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு.
அதிமுக உறுப்பினர்கள் கொடுத்த கவன ஈர்ப்பு தீர்மானத்தை 5 நாட்கள் ஆகியும் எடுக்கவில்லை எனக்கூறி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ட்டட எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்திருக்கின்றனர். தீர்மானம் நாளை எடுத்துக்கொள்ளப்படும் என சபாநாயகர் ஜேசிடி.பிரபாகர் தெரிவித்திருக்கிறார்.
“கொடுத்ததெல்லாம் கொடுத்தார்… பாடல் பாடிய எம்எல்ஏ; சிரித்த முதல்வர் விஜய்

சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வாகனம் வழங்கப்படும் என முதல்வர் விஜய் அறிவித்த நிலையில்,”கொடுத்ததெல்லாம் கொடுத்தார்… அவர் யாருக்காக கொடுத்தார்.. ஒருத்தருக்காக கொடுத்தார்..ஊருக்காக கொடுத்தார்” என்று தவெக எம்எல்ஏ சிந்து எம்ஜிஆர் பாட்டு பாடி நன்றி தெரிவித்தார். அதற்கு முதல்வர் விஜய் சிரிக்கிறார்.
“கொடுக்கிற காரை இன்னோவா (Innova) காராக கொடுத்தால் நன்றாக இருக்கும்”- எம்எல்ஏ சண்முகன்
“தமிழகத்தை தாங்கி பிடித்திருக்கும் முதல்வர் நமக்கு கிடைத்திருக்கிறார் என்ற பெருமையோடு, அவருக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். கொடுக்கிற காரை இன்னோவா (Innova) காராக கொடுத்தால் நன்றாக இருக்கும் என்று பின்னால் இருக்கும் உறுப்பினர்கள் சொல்லுகின்றனர்”- எம்எல்ஏ சண்முகன் பேச்சால் சட்டப்பேரவையில் சிரிப்பலை
‘நிறைய பேரிடம் 4, 5 கார்கள் இருக்கிறது, ஆனாலும்.!’- மன்னார்குடி எம்எல்ஏ காமராஜ்

சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் வாகனம் வழங்கப்படும் என்ற முதல்வர் விஜய்யின் அறிவிப்புக்கு மன்னார்குடி எம்எல்ஏ காமராஜ் நன்றி தெரிவித்திருக்கிறார். சட்டமன்றத்தில் பேசிய அவர், “அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் கார் என்று சொன்னவுடன் எல்லோரும் சந்தோஷமாக இருக்கிறார்கள். நிறைய பேரிடம் 4, 5 கார்கள் இருக்கிறது. என்னிடமும் கார் இருக்கிறது. ஆனால் நம் முதலமைச்சர் கொடுத்த காரில் செல்லும்போது நான் பெருமையாக பணிக்கு செல்வேன். அவர் கொடுத்த காரில் தொகுதியைச் சுற்றி வரும்போது அதற்கு இருக்கக்கூடிய கெத்து எம்எல்ஏ என்ற கெத்து… முதலமைச்சருக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று கூறியிருக்கிறார்.
“அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் வாகனம் வழங்கப்படும்” – முதல்வர் விஜய்
தமிழக சட்டப்பேரவையில் இன்று நிதிநிலை அறிக்கை, நீர்வளம், ஊரக வளர்ச்சி, சுற்றுலாத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சட்டப்பேரவையில் சில முக்கிய அறிவிப்புகளை முதல்வர் விஜய் அறிவித்திருக்கிறார். அதன்படி சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் வாகனம் (கார்) வழங்கப்படும். வாகன ஓட்டுநர், எரிபொருள், வாகன பராமரிப்புக்கு மாதந்தோறும் ரூ.75,000 வாகனப்படியாக வழங்கப்படும் என்று அறிவித்திருக்கிறார்.


தவிர பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.3 உயர்வு ஒரு லிட்டர் பால் ரூ.38ல் இருந்து ரூ.41-க்கு கொள்முதல் செய்யப்படும் என்றும் தெரிவித்திருக்கிறார்.
மேலும் வட சென்னை மக்களுக்கு உயர்தர மருத்துவ சேவை எளிதில் கிடைக்கும் வகையில், பெரம்பூரில் ரூ.300 கோடி மதிப்பீட்டில் 400 படுக்கைகள் கொண்ட உலக தரத்திலான பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை அமைக்கப்படும் என்றும் முதல்வர் விஜய் அறிவித்திருக்கிறார்.


