“காங்கிரஸ் நிர்வாகிகளை தவெக-வில் இணைப்பதை ஏற்க முடியாது” – முதல்வர் விஜய் மீது காங்கிரஸ் அதிருப்தி | Congress expresses dissatisfaction cannot accept the induction of Congress functionaries into tvk

Spread the love

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில பொதுச்செயலாளர் கணபதி சிவக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த சில தினங்களாக த.வெ.க. ஆட்சிக்கு வந்த பிறகு, மாற்றுக் கட்சிகளைச் சேர்ந்த பலர் அக்கட்சியில் இணைந்து வருவது கவனத்திற்குரியது.

அவ்வாறு இணைபவர்களின் பின்னணி, நோக்கம் மற்றும் கடந்த கால செயல்பாடுகள் குறித்து முழுமையாக ஆய்வு செய்த பின்னரே அவர்களை கட்சியில் இணைத்துக்கொள்ள வேண்டும். குறிப்பாக, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், மாவட்ட மற்றும் மாநில நிர்வாகிகள், தொண்டர்கள் உள்ளிட்ட சிலர் சமீப காலமாக த.வெ.க-வில் இணைந்துள்ளனர்.

கூட்டணி தர்மத்தின் மாண்பைக் கருத்தில் கொண்டு, அவர்களை கட்சியில் இணைப்பதைத் தவிர்த்திருக்க வேண்டியது அவசியமாக இருந்தது.

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலின்போது த.வெ.க. ஆட்சி அமைக்கக் கூடாது என்ற நோக்கில் தி.மு.க மற்றும் அ.தி.மு.க பல்வேறு அரசியல் நகர்வுகளை மேற்கொண்டபோது, எந்தவித நிபந்தனையும் இன்றி முதன்முதலில் த.வெ.க.விற்கு ஆதரவு அளித்தது காங்கிரஸ் பேரியக்கம்தான்.

காங்கிரஸின் நிலைப்பாட்டைத் தொடர்ந்து மற்ற கூட்டணிக் கட்சிகளும் ஆதரவு வழங்கின. இதன் காரணமாகவே தி.மு.க மற்றும் அ.தி.மு.க-வின் அரசியல் திட்டங்கள் வெற்றி பெறாமல் போனது.

கணபதி சிவக்குமார்

கணபதி சிவக்குமார்

அத்தகைய சூழ்நிலையில் த.வெ.க ஆட்சி அமைக்க உறுதுணையாக இருந்த கூட்டணிக் கட்சிகளின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை த.வெ.க.வில் இணைத்துக்கொள்வது ஏற்றுக்கொள்ள முடியாத செயலாகும்.

கடந்த காலங்களில், கூட்டணியில் இருந்த கட்சிகளின் நிர்வாகிகள் கருத்து வேறுபாடு காரணமாக விலகியபோதும், கூட்டணி மரியாதையைப் பேணும் வகையில் அவர்களை தங்களது கட்சியில் இணைத்துக்கொள்ளாமல் அரசியல் நாகரிகத்தை தி.மு.க கடைப்பிடித்துள்ளது. காங்கிரஸ் தொண்டர்களை தி.மு.க-வில் சேர்க்கும் நடவடிக்கைகளை அதன் தலைமையே ஊக்குவிக்கவில்லை.

ஆனால் தற்போது காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் நிர்வாகிகள் த.வெ.க.வில் இணைவது, கூட்டணி தர்மத்தைப் பாதிப்பதோடு தேவையற்ற விமர்சனங்களுக்கும் அரசியல் சர்ச்சைகளுக்கும் வழிவகுக்கும்.

எனவே, தமிழக முதலமைச்சரும், த.வெ.க. தலைவருமான விஜய் இனிமேலாவது இத்தகைய செயல்களை ஊக்குவிக்காமல், கூட்டணிக் கட்சிகளின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து செயல்பட வேண்டும்” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *