காங்., எம்எல்ஏ அறையில் இளம்ஜோடி உல்லாசம்.. பார்த்ததுமே பதறியடித்து ஓட்டம்! யார் அவர்கள்? என்னநடந்தது? | Congress MLA finds couple in compromising position in his room

Spread the love

India

oi-Nantha Kumar R

போபால்: மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் எம்எல்ஏவின் ஓய்வறையில் இளைஞரும், இளம்பெண்ணும் உல்லாசமாக இருந்தனர். திடீரென்று எம்எல்ஏ உள்ளே நுழைந்ததால் பதறிப்போன அந்த ஜோடி அறையில் இருந்து எஸ்கேப்பான சம்பவம் நடந்துள்ளது.

congress-mla-finds-couple-in-compromising-position-in-his-room

மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏவாக இருப்பவர் தினேஷ் ஜெயின் பாஸ். இவர் மதிப்பூர் சட்டசபை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

இந்நிலையில தான் எம்எல்ஏ தினேஷ் டெல்லி பயணத்தை முடித்துவிட்டு மத்திய பிரதேசம் திரும்பினார். அப்போது தலைநகர் போபாலில் ஓய்வெடுத்துவிட்டு செல்ல விரும்பினார்.

மத்திய பிரதேச தலைநகர் போபாலில் எம்எல்ஏக்கள் ஓய்வறை உள்ளது. அங்கு பிளாக் 3ல் அறை எண் 14 மற்றும் அறை எண் 15 ஆகியவை தினேஷ் எம்எல்ஏவுக்கு ஒதுக்கப்பட்டது. அவர் அங்கு சென்று 2 அறைகளின் சாவிகளையும் கேட்டார். அப்போது அங்கிருந்த ஊழியர் அறை 15ல் ஆள் இருப்பதாக கூறினார்.றை எண் 14க்கான சாவியை மட்டுமே வழங்கினார்.

அந்த சாவியை வாங்கி கொண்டு எம்எல்ஏ தினேஷ் சென்றார். அப்போது அறை எண் 15ல் கதவு லேசாக திறந்து இருந்தது. உள்ளே எட்டிப்பார்த்தபோது இளைஞரும், இளம்பெண் ஒருவரும் உல்லாசமாக இருந்துள்ளனர். இதை பார்த்து எம்எல்ஏ தினேஷ் அதிர்ந்து போனார். உடனடியாக அவர் சத்தம் போட்டார். இதனால் பதறிப்போன அந்த ஜோடி அறையில் இருந்து அவசரஅவசரமாக வெளியேறி ஓடியது.

இதனால் எம்எல்ஏ தினேஷ் கடும் கோபமடைந்தார். எப்படி தனக்கு ஒதுக்கப்பட்ட அறையில் இன்னொருவரை அனுமதிக்கலாம் என்று ஊழியரிடம் கடும் வாக்குவாதம் செய்தார். அதுமட்டுமின்றி வெளியாட்கள் எப்படி உள்ளே நுழைந்தனர்? அவர்களுக்கு அனுமதி கொடுத்தது யார்? என்று கேள்விகள் எழுப்பி வாக்குவாதம் செ்தார். இதுதொடர்பாக அவர் சட்டசபை செயலாளர் மற்றும் பொதுப்பணித்துறைக்கு புகார் வழங்கி உள்ளார்.

அதன்படி எம்எல்ஏக்களின் ஓய்வறையை பொதுப்பணித்துறை பராமரித்து வருகிறது. இதனால் மத்திய பிரதேச மாநில பொதுப்பணித்துறை முதன்மை செயலாளர் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை தொடங்கி உள்ளதாக மத்திய பிரதேச சட்டசபையின் மக்கள் தொடர்பு அதிகாரி உறுதி செய்துள்ளார்.

அதன்படி அந்த இளம்ஜோடி யார்? எப்படி எம்எல்ஏ ஓய்வறையில் நுழைந்தனர்? என்பது தொடர்பாக தீவிரமாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எம்எல்ஏவின் ஓய்வறையில் இளம்ஜோடி உல்லாசம் அனுபவித்த சம்பவம் மத்திய பிரதேசத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *