மொத்தம் 6 டார்க்கெட்.. சவுதியின் இதயத்தில் விழும் அடி.. ருத்ரதாண்டவமாடும் ஹவுதிகள்! பதற்றம் | Houthis claims attacks on 6 targets including Saudi Arabia Aramco, Riyadh airport after the Al -Sharya village airstikes

Spread the love

International

oi-Nantha Kumar R

சனா: சவுதி அரேபியா – ஹவுதிகள் இடையேயான மோதல் இன்று மீண்டும் தீவிரமாகி உள்ளது. ஏமனில் நடத்தப்பட்ட தாக்குதலில் ஹவுதிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் 20க்கும் அதிகமான அப்பாவிகள் பலியான நிலையில் சவுதி அரேபியாவின் முக்கிய 6 இடங்களை குறிவைத்து ஹவுதிகள் பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை ஏவியுள்ளதாக அறிவித்து இருப்பது பதற்றத்தை அதிகரித்துள்ளது.

houthis-claims-attacks-on-6-targets-including-saudi-arabia-aramco-riyadh-airport-after-the-al-shar

சவுதி அரேபியா – ஏமன் ஹவுதிகள் இடையேயான மோதல் தொடர்ந்து வருகிறது. கடந்த சில வாரங்களால் மோதலின் வீரியம் குறைந்திருந்த நிலையில் இன்று திடீரென்று அதிகரித்துள்ளது. சவுதி அரேபியாவும், ஹவுதிகளும் மாறி மாறி தாக்கி வருகின்றன.

அதன்படி இன்று ஹவுதிகள் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சவுதி அரேபியாவின் முக்கிய இடங்களை நோக்கி ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை அனுப்பி உள்ளதாக ஹவுதிகள் அறிவித்துள்ளன.

இதுதொடர்பாக ஹவுதிகளின் ராணுவ செய்தி தொடர்பாளர் யாக்யா சாரி கூறியுள்ளதாவது: ”சவுதி அரேபியாவின் 6 இடங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தி உள்ளோம். சவுதி தலைநகர் ரியாத்தில் உள்ள காலித் சர்வதேச விமான நிலையம், நீரேற்று நிலையம் , சவுதி அரேபியாவின் கச்சா எண்ணெய் வர்த்தகத்துக்கு முக்கியமாக இருக்கும் அராம்கோ நிறுவனத்தின் உள்கட்டமைப்பு, நஜ்ரானில் தேசிய பாதுகாப்பு படை முகாம் உள்பட சவுதி அரேபியாவின் 3 ராணுவ நிலைகள் என்று 6 இலக்குகளை குறிவைத்து தாக்குதல் நடத்தி உள்ளோம். இந்த தாக்குதலை நாங்கள் தான் நடத்தினோம். இந்த தாக்குதல் வெற்றிகரமாக தங்களின் இலக்குகளை அடைந்துள்ளது.

பாலிஸ்டிக் ஏவுகணைகள், குரூஸ் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது. எங்களை நோக்கி சவுதி அரேபியா இனியும் தாக்குதல் நடத்தினால் நாங்களும் பதிலுக்கு தாக்குவோம். பயப்படமாட்டோம். தற்போதைய தாக்குதல் என்பது பதிலடி தாக்குதலாகும்” என்றார். இந்த தாக்குதலில் சவுதி அரேபியாவிற்கு பெரும் சேதம் ஏற்பட்டதாக ஹவுதிகள் கூறியிருந்தாலும், இதுபற்றி சவுதி அரேபியா தரப்பில் எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை.

தற்போது தாக்குதல் நடத்தப்பட்டதில் ரியாத் விமான நிலையம் சவுதி அரேபியாவின் தலைநகரில் அமைந்துள்ளது. இது மிகவும் முக்கிய இடமாகும். அதேபோல் அராம்கோ நிறுவனம் என்பது சவுதி அரேபியாவின் கச்சா எண்ணெய் வர்த்தகத்திற்கு முக்கியமான நிறுவனமாக உள்ளது.

அடுத்ததாக ரியாத்தில் உள்ள நீரேற்று நிலையம் என்பது தலைநகரில் உள்ள மக்களின் குடிநீருக்கு முக்கியமான இடமாகும். இப்படியாக சவுதி அரேபியா மக்களின் வாழ்வாதாரத்துக்கு முக்கியமாக உள்ள இடங்களை குறிவைத்து ஹவுதிகள் தாக்குதல் நடத்தி உள்ளன.

ஹவுதிகளின் இந்த திடீர் தாக்குதலின் பின்னணியில் முக்கிய விஷயம் உள்ளது. அதாவது சவுதி அரேபியா இன்று ஏமன் நாட்டில் ஹவுதிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் திடீரென்று தாக்குதல் நடத்தியது.

ஏமன் தலைநகர் சனா அருகே உள்ள அல்ஷரியா எனும் கிராமத்தில் இன்று சவுதி அரேபியா வான்வெளி தாக்குதல் நடத்தியது. இதில் சிறுவர், சிறுமிகள், பெண்கள் உள்பட 27 அப்பாவிகள் இறந்த நிலையில் 36 பேர் காயமடைந்தனர். இதனால் டென்ஷனான ஹவுதிகள், சவுதி அரேபியா மீது தாக்குதல் நடத்தி உள்ளன. இதனால் இருதரப்புக்கும் இடையேயான மோதல் அதிகரித்துள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *