அதே நேரத்தில், காசா இனி பயங்கரவாதத் தாக்குதல்களுக்கான தளமாகப் பயன்படுத்தப்படாது என்பதால், இஸ்ரேலுக்குத் தேவையான தகுந்த பாதுகாப்பும் கிடைக்கும்.
ட்ரம்பின் 20 அம்சத் திட்டத்தைச் செயல்படுத்துவதில் இது ஒரு மிகப்பெரிய திருப்புமுனையாகும்.
இந்த ஒப்பந்தம் மிகவும் கவனமாகத் திட்டமிடப்பட்டு கட்டம் கட்டமாக அமல்படுத்தப்படும். நிராயுதபாணியாக்கும் பணி நிறைவடையும் போது, இஸ்ரேலியப் படைகள் வெளியேறும்.
சர்வதேச ஸ்திரத்தன்மைப் படை புதிய பாலஸ்தீனக் காவல்துறையுடன் இணைந்து, காசா அதன் குடிமக்களுக்கும் அதன் அண்டை நாடுகளுக்கும் பாதுகாப்பான இடமாக இருப்பதை உறுதி செய்யும்.
ஒரு வருடத்திற்கு முன்பு, இங்கே கொடூரமான போரும், மனிதநேய நெருக்கடியும், பிணைக்கைதிகள் கொடூரமான முறையில் சிறைபிடிக்கப்பட்ட சூழலும் நிலவியது.
இப்போது நாம் வரலாற்றுச் சிறப்புமிக்க முன்னேற்றத்தைக் கண்டுள்ளோம். எனினும் இன்னும் செய்ய வேண்டிய வேலைகள் நிறைய உள்ளன.
எகிப்து, கத்தார் மற்றும் துருக்கி ஆகிய மத்தியஸ்தர்களுக்கு அவர்களின் முக்கிய முயற்சிகளுக்காகவும், குறிப்பாக இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க திருப்புமுனையைச் சாத்தியமாக்க ஓயாது உழைத்த எனது சிறப்பான குழுவிற்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.