International
oi-Nantha Kumar R
புடாபஸ்ட்: ஊழல் புகாரில் சிக்கிய முன்னாள் அமைச்சர் வீட்டில் அதிகாரிகள் ரெய்டு சென்றனர். அப்போது அவர் தனது பண்ணை வீடு, குடோன் மற்றும் காட்டுக்குள் கட்டுக்கட்டாக பணத்தை புதைத்து வைத்திருந்ததை பார்த்து அதிகாரிகள் மிரண்டு போயினர். மொத்தமாக ரூ.188 கோடி பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் அதன் பின்னணி பற்றிய பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளது.
ஹங்கேரி நாட்டின் பிரதமராக கடந்த 2010ம் ஆண்டு முதல் 2026 மே மாதம் வரை இருந்தவர் விக்டர் ஓர்பன். சமீபத்திய தேர்தலில் அவர் தோல்வியை தழுவினார். இதையடுத்து புதிய பிரதமராக பீட்டர் மாக்யார் பொறுப்பேற்று செயல்பட்டு வருகிறார்.

முன்னாள் பிரதமர் விக்டர் ஓர்பன் ஆட்சியில் அதிகளவில் ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதனை முறையாக விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறி தேர்தலை எதிர்கொண்டு தான் பீட்டர் மாக்யார் வென்று பிரதமரானார்.
தேர்தலில் சொன்னபடியே பீட்டர் மாக்யார், முன்னாள் அமைச்சர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் பற்றி விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். அதன்படி விசாரணை நடந்து வருகிறது. கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அந்த வகையில முன்னாள் அமைச்சர் மிக்லோஸ் செஸ்தாக் வீடு, அலுவலகம், பண்ணை வீட்டில் அதிரடியாக சோதனை மேற்கொண்டனர். இவர் கடந்த 2014ம் ஆண்டில் இருந்து 2018 ம் ஆண்டு வரை மேம்பாட்டு துறை அமைச்சராக இருந்தார். கட்டுக்கட்டாக ரொக்கப்பணம் பல இடங்களில் பதுக்கி வைக்கப்பட்டது.
Here is the footage released by the National Asset Recovery and Protection Office showing billions of forints’ worth of cash being dug out of the ground. The money belonged to @PM_ViktorOrban’s former minister, Miklós Seszták.When the money was handed over, 12 employees of the Hungarian State Treasury spent eight hours counting it using five cash-counting machines.From today, Viktor Orbán is proven to be a mafia boss. An ousted mafia boss. And Fidesz is a criminal organisation.
— Magyar Péter (Ne féljetek) (@magyarpeterMP) November 13, 2026
குறிப்பாக வனப்பகுதியில் பள்ளம் தோண்டி பாதுகாப்பாக கட்டுக்கட்டாக பணம் வைக்கப்பட்டு இருந்தது. அதேபோல் பண்ணை வீடு மற்றும் குடோன்களிலும் ரகசியமாக தனி அறை அமைத்து பாதுகாப்பாக பணம் வைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. இந்த பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
பறிமுதலான பணத்தின் மொத்த மதிப்பு 20 மில்லியன் டாலராகும். இது இந்திய மதிப்பு சுமார் ரூ.188 கோடியாகும்.
இதுபற்றி நிதி அமைச்சர் அண்டராஸ் கர்மான் கூறுகயைில்,”மொத்தம் 5.07 பில்லியன் Forints(ஹங்கேரி நாட்டு பணம்), 2.66 மில்லியன் யூரோ, 1.26 மில்லியன் அமெரிக்க டாலர் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மொத்த மதிப்பு ரூ.188 கோடியாகும். 8 கருவூல பணியாளர்கள் 5 பணம் எண்ணும் இயந்திரங்களை பயன்படுத்தி 8 மணிநேரம் இந்த பணத்தை எண்ணி முடித்தனர்” என்று கூறியுள்ளார்.
இதுபற்றி ஹங்கேரி தேசிய சொத்து பறிமுதல் மற்றும் பாதுகாப்பு அதிகாரி சார்பில், ”முன்னாள் அமைச்சர் மிக்லோஸ் செஸ்தாக் தொடர்புடைய பல இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. அப்போது வனப்பகுதி, குடோன் மற்றும் பண்ணை வீட்டில் பூமிக்கடியில் பாதுகாப்பாக பணம் வைக்கப்பட்டு இருந்தது. இந்த பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. விரைவில் அரசு கஜானாவில் சேர்க்கப்பட உள்ளது” என கூறியுள்ளார்.
