ஏரியா? குப்பைக் கிடங்கா? கழிவுகளால் மாசடைந்த திருப்பத்தூர் பெரிய ஏரி – நகராட்சியின் விளக்கம் என்ன? | Tirupattur Big Lake Turns Into Garbage Dump? Municipality Responds

Spread the love

திருப்பத்தூர் (திருப்பத்தூர் மாவட்டம்) புதிய பேருந்து நிலையத்தை ஒட்டி அமைந்துள்ளது பெரிய ஏரி. மீன்பிடித் தொழில், விவசாயப் பாசனம் எனப் பல வகைகளில் மக்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும் இந்த ஏரி, தற்போது குப்பைக் கிடங்காக மாறி வருவது அப்பகுதி மக்களிடையே வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

ஏரியின் உட்புறம் மட்டுமல்லாமல், அதைச் சுற்றியுள்ள சாலையோரங்களிலும் பல மாதங்களாகத் தொடர்ந்து குப்பைகள் கொட்டப்பட்டு வருகின்றன. நெகிழி கழிவுகள், மருத்துவக் கழிவுகள், காய்கறிக் கழிவுகள் எனப் பலதரப்பட்ட கழிவுகள் ஆங்காங்கே குவிந்து கிடக்கின்றன.

இதனால் ஏரியின் தூய்மை பாதிக்கப்பட்டு, அப்பகுதியில் சுகாதாரச் சீர்கேடு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது.

குப்பைகளைக் கொட்டக்கூடாது என்பதற்காக வேலி அமைக்கப்பட்டிருந்தும், அதை மீறிக் குப்பைகள் கொட்டப்படுவது தொடர்கதையாகி வருகிறது.

இதுகுறித்து அப்பகுதி மக்களிடம் விசாரித்தபோது, “இரவு நேரங்களில் சமூகப் பொறுப்பற்ற சிலர்  குப்பைகளை மூட்டையாகக் கட்டிக்கொண்டு வந்து இந்தச் சாலையோரங்களில் போட்டுவிட்டுச் செல்கிறார்கள். ஏரியைச் சுற்றிலும் கழிவுகள் கொட்டப்படுவதால் நோய்த்தொற்று பரவும் அபாயம் இருக்கிறது.

ஏரியை ஒட்டி ஏராளமான குடும்பங்கள் வசிக்கின்றன. தினமும் இந்தப் பாதையில் செல்லும் மக்களை முகம் சுளிக்க வைக்கிறது.மேலும் பல வாகனங்கள் செல்லும் இந்தப் பகுதியில் குப்பைகள் குவிந்து கிடப்பதைப் பார்க்கவே வேதனையாக இருக்கிறது” எனத் தெரிவித்தனர்.

ஏரியைச் சுற்றிலும் குப்பைகள் குவிந்து கிடப்பது ஒருபுறம், அதனால் ஏற்படக்கூடிய சுகாதாரப் பாதிப்புகள் மறுபுறம் எனப் பொதுமக்கள் அவதிப்பட்டு வரும் நிலையில், இந்தப் பிரச்னை குறித்து விகடன் சார்பாக நேரில் சென்று ஆய்வு செய்தோம். தொடர்ந்து, சம்பந்தப்பட்ட நகராட்சி அதிகாரிகளிடமும் இதுகுறித்துக் கேட்டோம்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *