காணாமல் போன செஞ்சி சிறுமியை கண்டுபிடிக்கவில்லை, ஆனால் குழந்தைகளுக்கு ‘கேக்’.! – எடப்பாடி விமர்சனம்| edappadi criticises cm vijay for distributing cake

Spread the love

குழந்தைகள் தினத்தை முன்னிட்டு அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு கேக் வழங்கும் திட்டத்தை முதல்வர் ஜோசப் விஜய் இன்று ( நவ.13) துவங்கி வைத்து மாணவர்களுக்கு கேக் மற்றும் வாழ்த்து அட்டைகளை வழங்கினார்.

மாணவர்களுக்கு கேக் வழங்கும் திட்டம் குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டு இருக்கும் எக்ஸ் பதிவில், “திருப்பூர் வீரபாண்டி அருகே 11 வயது சிறுமி கடத்தப்பட்டு, கடுமையான பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளதாகவும், பெரியபாளையம் அருகே மாணவி மீது பெட்ரோல் ஊற்றி கொலை செய்ய முயற்சி செய்ததாகவும் இவ்வருட குழந்தைகள் தினத்தை ஒட்டி வரும் செய்திகள் மக்களைப் பேரதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

 கேக் வழங்கிய முதல்வர்

கேக் வழங்கிய முதல்வர்

மாற்றம் என்று சொல்லி ஆட்சிக்கு வந்த இந்த Deemed தாய்மாமாவின் ஆட்சியில், கடந்த 6 மாதங்களில் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் மீதான குற்றங்கள் பன்மடங்கு அதிகரித்துள்ளதை இக்குற்றங்கள் வெட்ட வெளிச்சமாக்குகின்றன.

காணாமல் போன செஞ்சி சிறுமியை இன்னும் “விஜய் மாமா”வின் அரசு கண்டுபிடிக்கவில்லை! ஆனால், இன்றைய தினம் பள்ளிக் குழந்தைகளுக்கு “கேக்” ஊட்டி விடப் போகிறாராம். வெட்கமாக இல்லையா @CMOTamilNadu அவர்களே?

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *