காதலியின் 3,400 முத்தங்களால் விபரீதம்: வைரலான வீடியோ; காரைப் பறிமுதல் செய்து அபராதம் விதித்த போலீஸ்! | The police have seized the car—adorned with a lover’s kisses—and imposed a fine!

Spread the love

மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரைச் சேர்ந்தவர் ஆதித்ய சிகார்வார். இன்ஸ்டாகிராமில் பிரபலமடைவதற்காக, தனது சுவிஃப்ட் காரை வித்தியாசமான முறையில் மாற்ற திட்டமிட்டுள்ளார். இதற்காக அவருடைய பெண் தோழி ஒருவர் சுமார் 3,400 முறை லிப்ஸ்டிக் தடவிய உதடுகளால் காரின் வெளிப்பகுதி முழுவதும் முத்தமிட்டு அலங்​கரித்துள்ளார்.

இந்த விசித்திரமான அலங்காரத்திற்காக 3.5 மணி நேரமும், ரூ.800 முதல் 900 வரையிலான லிப்ஸ்டிக்கும் செலவிடப்பட்டுள்ளது.
இவ்வாறு லிப்ஸ்டிக் முத்தங்களால் நிறைந்த காரை, நகரத்தின் முக்கியச் சாலையில் அதிவேகமாக ஓட்டிச் சென்று வீடியோ எடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளனர்.

கிஸ் கார்

கிஸ் கார்

இந்த “முத்தக் கார்” வீடியோ இணையத்தில் காட்டுத்தீயாகப் பரவி, சுமார் 55 லட்சம் பார்வையாளர்களைப் பெற்றது. ஆதித்யாவின் ஃபாலோயர்கள் எண்ணிக்கையும் உயர்ந்தது. இருப்பினும், இந்த வைரல் வீடியோ குவாலியர் போக்குவரத்து காவல்துறையினரின் கவனத்திற்கும் சென்றது.

படேல் நகர் – சிட்டி சென்டர் பகுதியில் அதிவேகமாகச் சென்ற காரின் காட்சிகளைக் கொண்டு விசாரணை நடத்திய காவல்துறையினர், தாதிப்பூர் பகுதியில் காரை அடையாளம் கண்டு பறிமுதல் செய்தனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *